படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த கல்லூரி மாணவர் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் பிரண்டார்குளம் பள்ளி தெருவை சேர்ந்த டேவிட் மனக்காஸ் என்ற இளைஞர் நாசரேத்தில் இருக்கும் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் சம்பவத்தன்று காலையில் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இந்த பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்றபடி அவர் பயணித்திருக்கின்றார். அப்போது பேருந்து வேகத்தடையை கடந்த போது இவரின் கால் சாலையில் உரசி இருக்கின்றது. […]
