நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி களம் காண உள்ளது. இதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை தி நகரில் உள்ள பாஜகவின் தலைமையிடமான கமலாலயத்தில் 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட செல்வாக்கு மிக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் […]
