வாணியம்பாடி அருகே ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் தேவசாணம் அழிஞ்சிகுளத்தை சேர்ந்தவர் 26 வயதான மாதவன். இவர் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் டைலர் கடை வைத்து தையல் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க வாணியம்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் […]
