காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க நகர துணை செயலாளரை 2 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். ராஜ்குமார் தே.மு.தி.க கட்சியின் நகர துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். மேலும் இவர் அதே பகுதியில், டெய்லர் கடை ஒன்றை வைத்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜே.என்.. சாலை பகுதியில் உள்ள ஆற்றங்கரை புறம்போக்கு நிலத்தை அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் அரசியல் பிரமுகர் […]
