அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் தேவையின்றி சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்த 153 நபர்களுக்கு காவல்துறையினர் 30,600 ரூபாய் அபராதம் […]
