சேலம் மாவட்ட தலைவாசல் அருகில் உள்ள செல்லியம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர் கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்தது. இதனையடுத்து தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் பங்களிப்புடன் புதிய தேர் தயார் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 57 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் சக்தி அழைத்தல், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. […]
