சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுகாண முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.unom.ac.in, https://exam.unom.ac.in மற்றும் https://e-governance.unom.ac.in இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
