பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு கணினி வழியாக நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வின் ஆங்கில பாடப் பிரிவுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]
