சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த போது இன்னொரு ஆட்டோவில் வந்த இரண்டு பேர் மாணவனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் ஓடும் ஆட்டோவில் மாணவனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற போது மாணவன் கீழே குதித்து தப்பியுள்ளார். பிறகு […]
