கடந்த 16ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் நடந்த குரூப் 1 தேர்வெழுத வந்த திருமணமான பெண்களை, போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, தேர்வில் யாரும் மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காக, காவல்துறையினர் பெண்களை கடுமையாக சோதித்ததுடன், கையில் வளையல், தாலி, கம்மல், மூக்குத்தி ஆகியவற்றைக் கூட கழற்ற வைத்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வறைக்குள் நுழையவேண்டும் எனில், பெண்கள் ஒரு துளி நகைக்கூட அணியக்கூடாது என வற்புறுத்தப்பட்டனர். குறிப்பாக தாலியைக் கூட கழற்றிக் கொடுக்கும் நிலைக்கு […]
