பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி இன்று காலை முதல் கயாவில் தேர்வர்கள் பயங்கர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கயா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சிலர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே காவல்துறை கண்காணிப்பாளரான ஆதித்யா குமார், […]
