உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 25000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தெற்கு உத்திரபிரதேச மேலிட பொறுப்பாளர் பிரியங்கா காந்தி அங்கேயே தங்கி சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதி யாத்திரையை பராபங்கி மாவட்டத்தில் தொடங்கிய […]
