தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி தனித்து போட்டியிடுகிறது. […]
