தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது முடிந்த வர்களாக கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
