திண்டுக்கல்லில் சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் இரண்டாவது கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுகளை ஆர்வத்துடன் போட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர், பழனி, திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகள் 224 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 224 மண்டலங்களிலும் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,832 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் முறையில் பணியாற்றுவதற்காக தொகுதி அளிக்கப்பட்டது. […]
