சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 5 ஆண்டு பதவி காலம் வருகின்ற 2021 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. அதனால் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு இன்னும் ஏழு மாதங்களில் இருக்கின்ற நிலையில் தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அவ்வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கான குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் […]
