தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் மன நிறைவோடு சிறப்பாக கொண்டாடும் வகையில், கரும்பு மற்றும் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசுகள் தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் […]
