தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பெருமளவு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும், சென்னையில் மக்கள் மழை நீரால் அவதிப்பட்டு தண்ணீரில் தத்தளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒருநாள் மழைக்கே சென்னையில் உள்ள மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் […]
