தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு […]
