புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் வெகு விமர்சையாக திருவிழா நடந்து முடிந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த எட்டு நாட்களாக திருவிழா நடந்து வந்துள்ளது. இந்த திருவிழாவின் அனைத்து நாட்களிலும் மாலை வேளையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கூடலூர், கம்பம், ஆம்பூர்பாளையம், லோயர்கேம்ப், நாராயணதேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவின் இறுதி நாளான நேற்று […]
