தமிழக அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 3 கோடி மதிப்பில் நடமாடும் தேநீர் வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் மற்றும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய நடமாடும் தேனீர் ஊர்திகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு மூன்று கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி 20 நடமாடும் இண்ட்கோ தேநீர் ஊர்திகளை முதல்வர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். […]
