Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி அருகே பெண்ணிற்கு கொரோனா அறிகுறி

தேனியில் பெண்ணொருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேனியில் கூடலூர் பகுதியை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களாக மூச்சுத் திணறலால் அவதிப்படும் பெண்ணிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் நாட்டுவெடி தயாரித்தபோது நடந்த விபரீதம்! தாய் மகள் பலி

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை காவல்நிலையம் அருகே உள்ள வரதப்பன்தெருவில் வசித்து வந்தவர்கள் பாண்டியம்மாள். அவரது மகள் நிவேதா. இரண்டு பேரும் இன்று வீட்டிலேயே நாட்டு வெடி தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென  வெடிகுண்டு  வெடித்ததில் பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த நிவேதா தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பற்றிய தீ அருகில் உள்ள குடிசைகளுக்கு பரவியது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அனுபவிக்க முயன்றான்…. ”வெட்டி கூறுபோட்டேன்” மகன் கொலையில் தாயின் வாக்குமூலம் …!!

மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார். தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் கடந்த 16ம் தேதி இரவு ஆண்-பெண் இருவர்  சைக்கிளில் வந்து ஒரு சாக்கு மூட்டையை போட்டு உள்ளனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசாருக்கு சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.அதில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் துண்டு தொண்டாக […]

Categories

Tech |