Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலில் பொறாமை” கொத்தனார் செய்த செயல்… 4 பேர் கைது…!!

வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு – அடுத்த மரணம்” ஒன்னும் புரியல அப்பா…. மாணவனின் விபரீத முடிவு…!!

ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரபாண்டி. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா  பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை படித்து வந்தார். இந்நிலையில் விக்கிரபாண்டி தனது தந்தை இளங்கோவனிடம் தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன் விக்கிரபாண்டியை  கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர்… வேகமாக மோதிய பைக்… 2 பேர் பரிதாபமாக பலியான சோகம்…!!

கோடாங்கிப்பட்டி அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன்.. 35 வயதான இவர் தனியார் பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பணியினை  செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் நண்பர் போடி பாரதி நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சரவணன் என்பவருடன் சேர்ந்து பைக்கில் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கோடங்கிபட்டி அருகில் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

தேனியில் முதல் போக நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகள் தீவிரம்…!

தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் முதல் போக நெல் நடவுக்கு ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. கூடலூர், கம்பம், சின்னமனூர், குச்சனூர், கோட்டூர்,வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உழுதல், வரப்பு சீர் அமைத்தல் போன்ற பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நடவுக்குத் தயாராகி வரும் நெல் நாற்றுகளை இன்னும் இரண்டு வாரங்களில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

50 ரூ காசு குடு, இல்லனா 4 கேரட் குடு…. காவல்துறையினர் வசூல் வேட்டை …!!

பெரியகுளம் அருகே உள்ள வாகன சோதனை சாவடியில் காவல்துறையின் வசூல் வேட்டை குறித்து வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே, மாவட்ட எல்லையான காற்றோடு அருகே உள்ளது வாகன சோதனை சாவடி. இந்த சோதனை சாவடி தற்போது காவல்துறையினரின் கட்டாய வசூல் செய்யும் கட்டண வசூல் மையமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், சரக்கு ஏற்றும் வாகனம், காய்கறி வண்டி உள்ளிட்ட வாகனங்களை மறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மன உளைச்சல்” அலற வைத்த மாஜி ராணுவ வீரரின் செயல்…!!

கோழிக்கறிக் கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாஜி ராணுவ வீரர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கோழிக்கறி கடைக்கு சென்ற வெங்கடேசன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் கறி வெட்டும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?…!!!

தேனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் வீசிய பலத்த சூறைக்காற்று: வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்..!!

தேனி மாவட்டம் தேவாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிய பலத்த சூறைக்காற்றால்  5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்து உள்ளன. இதனால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாயிகள் தங்கள் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக  வேதனை தெரிவிக்கின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார்?… ‘ஓபிஎஸ் வாழ்க’… கோஷமிட்டு வரும் ஆதரவாளர்கள்..!!

மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் ‘ஓபிஎஸ் வாழ்க’ என்று கோஷமிட்டு வருகின்றனர்.. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி, தமிழகத்தில் பேசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’… போஸ்டர்கள் கிழிப்பு..!!

தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’… போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவில் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆண்ட்ராய்டு போன் வாங்கித் தர தந்தை மறுப்பு… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!

தேனி மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு தந்தை போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு வின்சியா என்ற 18 வயது மகள் உள்ளார். இவர் கம்பத்தில் இருக்கின்ற  தனியார் கல்லூரி ஒன்றில் பிஏ.தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஊரடங்கு காலகட்டத்தால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு …!!

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் வகுப்பு – மரத்தின் உச்சியில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் அவலம்

கொரோனாவால் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி தடைபட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மரத்தின் உச்சியில் ஏறி கல்வி கற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் மாணவர்கள். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் 200க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கொண்டது கடமலை, மயிலை ஒன்றியம். தனியார் பள்ளிகளில் பயின்று வரும் இந்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தினசரி 3 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. செல்போன் சிக்னல் கிடைக்காததால் மலையின் உச்சிக்குச் சென்றும். மரத்தின்  மீது […]

Categories
தேனி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

கவனமா இருங்க….. 3 மாவட்ட மக்களுக்கு….. கடும் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு கொரோனா..!!

தேனி மாவட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் உட்பட 283 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அதிக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4337 ஆக உயர்ந்துள்ளது. இதில், தேனி டாஸ்மாக் அலுவலக துணை வட்டாட்சியர், தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஆட்சியர் ஆய்வு ….!!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மையத்தில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டர். பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கடந்த 18ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 120 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்றவர்கள் சிகிச்சை மைய வளாகத்தில் போராட்டத்தில் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் உச்சகட்ட அதிர்ச்சி – பொதுமக்கள் வேதனை ..!!

தேனி நகரில் கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சுமார் 500 பேருக்கு மேலாக தேனி நகரில் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதில் தேனி நகரின் மூன்றாவது வார்ட் பாலநகரின் ஒரே தெருவில் 46பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரத்துக்கு இறந்த உறவினர்கள் பார்க்க சென்றனர் இரண்டு ஆட்டோக்களில் 25க்கும் மேற்பட்டோர் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சென்று திரும்பினர். இதில் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்ய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவிடமிருந்து தப்பி வந்த கணவர்…. ஏற்க மறுத்த மனைவி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கொரோனா தொற்றில் இருந்து வீட்டிற்கு மீண்டு வந்தவர் தனிமையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் இருக்கின்ற பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் துரை என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.இவர் சென்ற 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை எடுத்து வருவதற்காக மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் சென்னை சென்று திரும்பியிருக்கிறார். அதன் பின்னர் துரைக்கு சென்ற பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் தரமில்லாத உணவு… தூக்கி வீசிய நோயாளிகள்..!!

அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 120 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு, நோய் தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இருக்கின்ற கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவுகளும் பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் இருந்து தயார் செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு நேற்று இரவு வழங்கப்பட்ட உணவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… எலக்ட்ரீசியனை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த எலக்ட்ரீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.. சமீப காலமாக தமிழகத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரிக்க தொடங்கியுள்ளது.. இதில் குறிப்பாக சிறுமிகள் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது..  அந்த வகையில் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.. அம்மாவட்டத்தில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தங்கராஜ் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் காலை 6 மணி – இரவு 8 வரை – அறிவிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு முடக்கத்தையும் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பரவலை தடுக்க தேனி மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் 8 நாட்களுக்கு…. முழு ஊரடங்கு அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

8 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனாவின் மையமாக விளங்கிய தலைநகர் சென்னை தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் நோய் தொற்றின் தாக்கத்திலிருந்து மீண்டு வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 13 நாட்களுக்கு முழு கடையடைப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவின் கூடாரமாக இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது. இது மகிழ்ச்சியான தகவலாக சென்னைவாசிகள் பார்த்தாலும், பிற மாவட்டங்களின் தொற்று அதிகரித்து வருவது அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனவை கட்டுக்குள் வைத்து முழுமையாக போக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. நேற்று புதிதாக 134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1863ஆக அதிகரித்துள்ளது. இதில் 671 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு…. வேறொரு பெண்ணுடன் நிச்சயம்…. வாலிபர் கைது…!!

தேனி அருகே திருமண ஆசை வார்த்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த பால்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். 28 வயதாகும் இவர் மேடை அலங்காரம் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் செட்டில் ஆகிவிட்டதாகவும், விரைவில் உன்னை உங்கள் வீட்டு பெரியோர்களின் அனுமதியுடன் திருமணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வன்புணர்வுக்குள்ளான சிறுமி… புகாரளிக்காத பெற்றோர்… தாமாக முன்வந்து விசாரித்து நடவடிக்கை எடுத்த போலீசார்..!!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, இளைஞர் ஒருவரைக் கைதுசெய்த வீரபாண்டி போலீசாருக்கு  பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் ரெங்கநாதன்.. 28 வயதான இவன் மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்துவருகிறான். இவன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசையாக பேசி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்தநிலையில், ரங்கநாதனுக்கு வேறொரு பெண்ணுடன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கம்பத்தில் ஜூலை 12 முதல் 25…. “முழு ஊரடங்கு” ஆலோசனை கூட்டத்தில் முடிவு….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மக்கள் தளர்வுகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர். இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவர்- மாமியார் வெறிச்செயல்… கல்யாணமான 4 மாதத்தில்… தூக்கில் சடலமாக தொங்கிய புதுப்பெண்..!!

பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள  கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories
வானிலை

40KM முதல் 50KM வரை பலத்த காற்று…. 10 மாவட்டங்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிய போகாத… தொடர்ந்து சித்திரவதை… மனமுடைந்து பெண் எடுத்த சோக முடிவு..!!

சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று  கணவர் வீட்டார் கூறி சித்திரவதை செய்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பாலமுருக கணேஷ்  என்பவருக்கும், போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் என்பவரின் மகள் 27 வயது லிங்கேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. […]

Categories
திருவள்ளூர் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 136 பேருக்கும், தேனியில் 58 பேருகும் கொரோனா இன்று உறுதி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,413 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் திருவள்ளூரில் 177 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,277 ஆக இருந்தது. நேற்றுவரை 1,923 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1299ல் இருந்து 1,435 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி என வெளியாகும் தகவலால் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சியும், பரப்பும் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அம்மாவட்டத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதில், தேனியில் 138 பேருக்கும், போடிநாயகனுரில் […]

Categories
மாநில செய்திகள்

தேனியில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் இன்று 64 பேருக்கு கொரோனா உறுதி!

தேனியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் எதிரொலியால் தேனி மாவட்டத்தில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும், இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் முழுஊரடங்கு அமல்… மாவட்ட ஆட்சியர்..!!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார். தேனி, கம்பம், போடிநாயக்கனுர் நகராட்சி பகுதியில், கடும் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கபடுகிறது. முழுஊரடங்கு கட்டுப்பாடுகள்: * மளிகை, காய்கறி, பழக்கடைகள் காலை 6 மணி முதல் […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து… போலீசாரை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்…!!

ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டத்திலுள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரை நோக்கிவந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகளின் காதல் திருமணத்தால் தாயும்…. 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனி அருகே 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் மும்பையில் இட்லி கடை வைத்து பிழைப்பை ஓட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனி எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா… அலுவலகத்திற்கு சீல்..!!

தேனியில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் அந்த அலுவலகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் நேற்று வரை 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 105 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பந்தின் மீது கவனம்…. 120 அடி மொட்டை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மரணம்….. தேனி அருகே சோகம்…!!

தேனி அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராமன். இவர் அதே பகுதியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகன் ஜெகதீசன். இவருக்கு வயது 43. மாலை ஜெகதீசன் அப்பகுதி சிறுவர்களுடன் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தான். பேட்டிங் செய்த சிறுவன் ஒருவன் பந்தை ஓங்கி அடிக்க, அதை கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே எதிர்பாராத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவருக்கு வேலையில்லை….. வீட்டில் நிம்மதி இல்லை… மனைவி எடுத்த வீபரீத முடிவு …!!

கணவன் உடனான தகராறு காரணமாக 7 மற்றும் 2 வயது மகன்களை விஷம் வைத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் உயிர் பிழைத்தார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் பிரபு (38). இவருக்கும் பவித்ரா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சன் (7), லக்ஷன் (2) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். ஊரடங்கு காரணமாக பிரபுவுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் கிடைத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானைகள் உயிரிழக்கும் அபாயம்…. உடனடி நடவடிக்கை வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!

கம்பம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதால், வனத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதி அருகேயுள்ள வன சரகத்திற்கு உட்பட்ட வெண்ணியாறு பகுதிக்கு அருகே உள்ள சுருளியாறு மின் நிலையத்திலிருந்து கயத்தாறு மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த மின் கம்பிகள் மின்சாரத்தை கடத்திச் செல்கின்றனர். இந்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக அமைந்திருப்பதால், அப்பகுதி வழியாக நடந்து […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி, தேனி உள்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை, தேனி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மோதி விபத்து….. தூக்கி வீசப்பட்ட தூய்மை பணியாளர் மரணம்…. தேனி அருகே சோகம்…!!

தூய்மைப் பணியாளர் சரக்கு வேன் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்த மேல்மந்தை பகுதியை சேர்ந்த பரமசிவம் ஒப்பந்த அடிப்படையில் தேவதானப்பட்டிப் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று பொம்மிநாயக்கன்பட்டி சாலையில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அச்சமயம் தேனியிலிருந்து ஒட்டன்சத்திரம் சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக பரமசிவன் வாகனத்தின் மீது மோத தூக்கி வீசப்பட்ட பரமசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு கனமழை…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக இடியுடன் கூடிய லேசான முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 8ம் தேதி முதல் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் மன்னார் வளைகுடா […]

Categories
தேனி மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – தேனி மாவட்ட எல்லையில் 24 மணி நேர சோதனை தீவிரம்!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி வருபவர்களை தடுக்க தேனி மாவட்டத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனியில் கடந்த மாதம் 43 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக 6 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சொந்த ஊரான தேனிக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயரும் அபாயம் எழுந்துள்ளது. எனவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொண்டு வா”… இரக்கமின்றி அடித்து கொடுமைப்படுத்திய கணவன்… மனைவி எடுத்த விபரீத முடிவு!

உத்தமபாளையம் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனவேதனையில் மனைவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாட்டில் சில பெண்கள் திருமணம் முடிந்த பின்  மறுவீட்டிற்கு போன பிறகு வரதட்சணை கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை போதாது என்று கேட்டு கணவன் மற்றும் மாமியார்- மாமனார்  அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லோருமே அப்படி இருக்க மாட்டார்கள்.. ஒருசிலரின் இந்த கொடுமையால்  மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் பெண்கள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செல்லும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்பனை… பதுக்கி வைத்திருந்த 500 பாட்டில்கள் பறிமுதல்!

தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய மனைவி.! கல் நெஞ்சும் கரைய கதறி அழுத கணவன்..! போலீஸ் வலையில் சிக்கிய குடும்பம்

தேனி மாவட்டம் போடி பகுதியில் வசித்து வரும் ராணுவ வீரர் முனீஸ்வரன் -சுப்புலட்சுமி தம்பதியினர்.  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு சியாமளா மற்றும் ராஜேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் பட்டாளத்தில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் முனீஸ்வரன்  இந்நிலையில் திடீரென  வீட்டில் சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்திருக்கலாம் அதனால் தற்கொலை செய்து கொண்டதாக  அக்கம் பக்கத்தினர் நினைத்து […]

Categories

Tech |