Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள்”…. அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய பொதுமக்கள்…!!!!!!

கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள். தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டியில் நேசன் கலாசாலை அரசு உதவி பெறும் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளி, நேசன் கலாசாலை பள்ளி வீதியில் இருக்கிறது. நேற்று நள்ளிரவு அந்த வீதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை அந்த சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றார்கள். இதனால் அப்பகுதியில் பலத்த சத்தமும் கரும்புகைமூட்டமும் இருந்தது. சத்தம் கேட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி”…. விண்ணப்பம் ஆரம்பம்…. ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக நவீன சலவையகங்கள் அமைக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தகுதியான குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கான விண்ணப்பங்களை www.theni.nic.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம். இல்லையென்றால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணைக்கு அதிகரித்த நீர்வரத்து”…. 4 ஜெனரேட்டர்கள் மின்சாரம் உற்பத்தி…!!!!!

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நான்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.- தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நேற்று முன் தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 84 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி மின்சார உற்பத்தியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: மேல்முறையீடு – ஓபிஎஸ் தகவல் …!!

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இன்று காலை இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றமானது தெரிவித்திருந்த நிலையில்,  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தேனியில் செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சேலம் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாமக்கல் நீலகிரி பல்சுவை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை விருதுநகர் வேலூர்

Heavy rain alert: 22 மாவட்ட மக்களே உஷார்….! உங்க பகுதிக்கும் அலெர்ட் சொல்லி இருக்காங்க…!!

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர்,  டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம்.  இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும்,  நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆடுகளை ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்ற விவசாயி”…. தேனியில் பரபரப்பு…!!!!!

நில பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடுகளை விவசாயி விட்டுச் சென்றார். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் காலியாக இருக்கும் இடத்தில் இன்று பகலில் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடுகள் மாலை வரை அங்கேயே இருந்தது. உரிமையாளர் யாரும் வந்து அழைத்துச் செல்லவில்லை. இதனால் தகவல் அறிந்து வந்த போலீசார் ஆடுகளை பார்வையிட்டு உரிமையாளர் யார் என விசாரணை மேற்கொண்டார்கள். போலீசார் விசாரணையில் ராயப்பன்பட்டி அருகே இருக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போதை ஊசி விற்பனை”…. மேலும் ஒருவர் அதிரடி கைது….!!!!!

சின்மனூரில் போதை ஊசி விற்பனை செய்ததில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் சென்ற சில நாட்களாக போதை ஊசி விற்பனை செய்ததாக போலீசார் பலரை அதிரடியாக கைது செய்தார்கள். இந்நிலையில் போலீசார் கைது செய்யப்பட்ட ஜோனத்தன் மார்க்கிடம் விசாரணை மேற்கொண்டதில் சின்னூரில் இருக்கும் அய்யனார்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் சுமார் 20க்கும் மேற்பட்ட போதை மருந்து பாட்டில்களை வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் நிஷாந்தை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக முடங்கி இருந்த தடுப்பணை கட்டும் பணி”…. மீண்டும் தொடக்கம்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!!!!

ஆண்டிபட்டி அருகே தற்பொழுது சிமெண்ட் கலவையால் தடுப்பணை கட்டப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலை அடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை இருக்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே சென்ற 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் சிமெண்ட் கலவைக்கு பதிலாக செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போதை மருந்து”… விற்பனையில் ஈடுபட்ட 100 இடைத்தரகர்கள்…. போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

போதை மருந்து விற்பனையில் 100 இடைத்தடகர்கள் ஈடுபட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் கைதானவர்களில் ஜோனர்த்தன் மார்க் என்பவர் போதை மருந்து விற்பனையை செய்து வந்திருக்கின்றார். இவர் இதற்காக ஒரு தனியார் மருந்து விற்பனை நிறுவனம் ஆரம்பித்து அந்நிறுவனத்தின் பெயரில் ஊக்கம் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து பல மாவட்டங்களுக்கும் புதுச்சேரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள்”…. கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தேனி தொழிலாளர் உதவியாளர் தகவல்….!!!!!!

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொழிலாளர் உதவியாளர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சுதந்திர தினமான நேற்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அழிக்கப்பட்டதா அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டதா என உணவு நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தொழிலாளர் உதவியாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இரை தேடி வந்த காட்டெருமை”…. பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு….!!!!!

அரசரடி வனப்பகுதியில் இரை தேடி வந்த பொழுது பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணி சென்ற பொழுது காட்டெருமை ஒன்று உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த வனத்துறையினர், மேகமலை வனச்சரகர் அஜய்க்கு தகவல் கொடுத்தனர். இதன்பின் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின் மருத்துவக் குழுவினர் காட்டெருமையை உடல் பிரேத பரிசோதனை செய்தார்கள். இதை தொடர்ந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடியில் தேசியக்கொடி ஏற்ற வந்த காங்கிரசார்”… இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு…!!!!!!

போடியில் தேசியக்கொடி ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று சுதந்திர தின விழாவையொட்டி தேனி மாவட்டத்திலுள்ள போடியில் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் முபராக் மந்திரி தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியினர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து பின் தேவர் சிலை, இந்திரா காந்தி சிலை, வள்ளுவர் சிலை அருகே இருக்கும் கொடி கம்பங்களில் தேசிய கொடி ஏற்றினார்கள். இதன் பின்னர் பெருமாள் கோவில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்கள்”…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!!!!

தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தார்கள். தேனி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மாவட்டத்தில் உள்ள 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதி மீறல்கள் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவியாளர் சிவகுமார் கூறியுள்ளதாவது, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேசியக்கொடி வழங்கும் பணி”…. தேனி மாவட்டம் முழுவதும் தீவிரம்….!!!!!

தேனி மாவட்டம் முழுவதும் வீடுதோறும் தேசியக்கொடி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடு வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாற்றுத்திறனாளி மாணவருக்காக சோலார் மோட்டார் சைக்கிள் வடிவமைப்பு”…. அரசு ஐடிஐ மாணவ-மாணவிகள் சாதனை….!!!!!!

மாற்றுத்திறனாளி மாணவருக்காக சோலார் மோட்டார் சைக்கிள் வடிவமைத்து தேனி அரசு ஐடிஐ மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள குரியம்மாள்புரத்தைச் சேர்ந்த அழகுசிங்கம் என்பவரின் மகன் கார்த்திகேயன். இவர் நடக்க முடியாத மாற்று திறனாளி. இவர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றார். இவரால் நடக்க முடியாததால் தினமும் தந்தை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு தூக்கிச் வந்து வகுப்பறையில் விட்டு செல்வார். இதைப் பார்த்த தொழிற்பயிற்சியில் பயிலும் மின்சார பணியாளர் மாணவ-மாணவிகள் நித்யா, பொன்மொழி, மகாலட்சுமி, புனிதா, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கும்பக்கரை அருவியில் சரியான நீர்வரத்து”…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி…!!!!!

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை நிறைந்த கும்பக்கரை அருவி அமைந்திருக்கின்றது. எனவே கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 28ஆம் தேதி முதல் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. “நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு”….!!!!!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டதாகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் இந்த அணையில் பருவ காலத்திற்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதி சென்ற வருடம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் அணையில் 137.5 அடி வரை தண்ணீரை தேக்கிக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதா”….. எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் மின்சார சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி என்.ஆர்.டி நகரில் இருக்கும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக காலை 8:30 மணி அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“சிறுபுனல் மின்திட்டம்”…. விநாடிக்கு 10 மெகாவாட்…. தொடர்ந்து நடைபெறும் மின்சார உற்பத்தி….!!!!

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகில் வைரவன் ஆறு, வெட்டுக்காடு, கப்பாமடை, குள்ளப்பகவுண்டன் பட்டி ஆகிய 4 இடங்களில் சென்ற 2006 ஆம் வருடம் முல்லைப் பெரியாறு தாழ்வாக போகும் இடங்களில் சிறுபுனல் மின் திட்டம் துவங்கப்பட்டது. இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் 2 மின்னாக்கிகள் வாயிலாக தலா 1.25 மெகாவாட் என மொத்தமாக 4 மின் திட்டங்களில் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் துவங்கிய மின்சார உற்பத்தி இப்போதுவரை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. ALERT-ஆ இருங்க மக்களே….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரூ.70 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம்…. எங்கேன்னு தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

மதுரை-தேனி இடையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 9:35 மணியளவில் தேனிக்கு வரும் இந்த ரயில், மாலை 6:15 மணியளவில் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம், மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் அடிப்படையில் இந்த இருசாலைகளிலும் ரயில்வே மேம்பாலமானது அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள் வானிலை

கொட்டி தீர்த்த மழை!… நிரம்பியது வைகை அணை…. சீறிப்பாய்ந்த தண்ணீர்…..!!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் 71 அடி உயரம்கொண்ட வைகை அணை இருக்கிறது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்நிலையில் தேனியில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வைகைஅணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளி மலை, அரசரடி, மூலவைகை, கொட்டக்குடிஆறு போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. அத்துடன் முல்லைப் பெரியாறு அணையிலிருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை….. சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர்கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தங்கும் விடுதி உரிமையாளர் வெட்டிக்கொலை”…. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்…..!!!!!!

தங்கும் விடுதி உரிமையாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஜக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் போடியில் தங்கும் விடுதி நடத்தி வந்த நிலையில் நேற்று இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது போடி தபால் நிலையம் அருகே சென்ற பொழுது அங்குள்ள கடையில் பலகாரம் வாங்கிக் கொண்டிருந்தார். அங்கு திடீரென ஜீப்பில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அறிவால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்…. திடீரென பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!!!

பள்ளத்தில் வாகனங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகராட்சியில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான  தற்போது கம்பம் கமிஷனர் குடியிருப்பு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனையடுத்து பின்னால் வந்த ஜீப்பும் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எப்படி வீடு கட்ட அனுமதி வழங்கலாம்… வட்டார வளர்ச்சி அலுவலரின் புகார்…. அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி….!!!!

நிலம் மோசடி செய்த 3  பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள திருமலாபுரம் பகுதியில் கடந்த 2005-ஆம் ஆண்டு பூங்கா அமைப்பதற்காக 12,877 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2,348 சதுர அடி நிலம் அப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த நிலத்தில் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகமும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் தேனி மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலை…. விபத்து ஏற்படும் அபாயம்…. கோரிக்கை விடுத்த பொதுமக்கள்….!!

மரத்தை அகற்றாமல் அமைக்கப்பட்ட சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் கோசந்திர ஓடையில் இருந்து லோயர்கேம்ப் வரை உள்ள சாலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அதிக விபத்து ஏற்படும் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து மையப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கம்பம் கோசந்திர ஓடை அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 450 மீட்டர் தூரம் உள்ள சாலை அகலப்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் சாலயோரம் இருக்கும் மரங்களை அகற்றாமலேயே […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முக கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை….. கலெக்டர் எச்சரிக்கை….!!!!

முகக்கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பு”…. பொது மக்களுக்கு குளிக்க தடை….!!!!!

பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடி மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதியில் சென்ற இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பிள்ளையார் தடுப்பனையில் நீர்வரத்து அதிகரித்து அருவிபோல் ஆர்ப்பரித்து கொட்டுவதால் தடுப்பனையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே பள்ளியில் 33 பேருக்கு கொரோனா….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காரிலிருந்து வெளியேறிய பு கை…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!

ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சீலையம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் குடும்பத்தினருடன் ராயப்பன்பட்டியிலிருந்து சீலையம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பழைய தென்னன்சாலை தனியார் நர்சரி கார்டன் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் காரை நிறுத்தினார். அதன் பின் காரில் வந்தவர்கள் அனைவரும் இறங்கினர். இந்நிலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட தாசில்தார்…. அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளார். இதற்கு தாசில்தார் நாகராஜன் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானை கஜம் அருவியில்…. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை…. வனத்துறையினர் கடும் எச்சரிக்கை….!!!

சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சதுரகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் யானை கஜம் அருவியில் மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக செல்வார்கள். இந்த அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சதுரகிரி மலைப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் வனத்துறையினரின் உத்தரவை மீறி சில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

7 வயது மகனை தவிக்கவிட்ட தாய்…. 3 பேரை திருமணம் செய்த கொடூர சம்பவம்…. தேனியில் பெரும் பரபரப்பு….!!!

ஒரு பெண் 3 பேரை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே என்ஜினியராக வேலை பார்க்கும் விஜய் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் வித்யா குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். இதனால் விஜய் போஸ் மனைவி வித்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் வித்யா […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள்…. வனக்காப்பாளர்க்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வனக்காப்பாளரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை என்ற  அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினம் தோறும் ஏராளமானோர் குளிக்க வருவது வழக்கம். அதேபோல் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார், கந்தசாமி, பாலமுருகன் என்ற 3 பேர் அருவிக்கு குளிக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். இதனால் அந்த பெண்கள் வனக்காப்பாளர் பீம்ராஜ் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பால் கறக்க சென்ற விவசாயி…. தோட்டத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சிறுத்தை கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குமணன்தொழு கிராமத்தில்விவசாயியான  பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் ஆடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பாண்டி பால் கறப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது 3  ஆடுகள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி உடனடியாக வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி  சம்பவ […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் பணிகள் நிறைவு பெறும்…. நடைபெறும் மின்கம்பம் மாற்றுப்பணி…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

நடைபெற்ற மின்கம்பம்   மாற்றும்   பணிகளை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் சேதமடைந்த நிலையில் 700 மின் கம்பங்கள் இருந்தது. இதனை மின்வாரியம் கணக்கெடுத்து புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழனிசெட்டிபட்டி பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ், செயற்பொறியாளர் பிரகலநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது. நமது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை  சேதப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல்  நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!

மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தாசில்தார் சரவன பாபு, ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று 87 பயனாளிகளுக்கு 20 லட்சத்து 70 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இத பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய நபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக மண் அள்ளிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பனங்காட்டுகாடு பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக  சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சிலர் சட்டவிரோதமாக பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் மண் அள்ளி கொண்டிருந்த ராஜிவ்  என்பவரை கைது செய்தனர். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“மதுரை -தேனி ரயிலை இயக்குவது சவால்”…. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!!!!!!

மதுரை சந்திப்பு தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி காணொளி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில் சேவையானது மதுரை தேனி விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் குடிநீர் வழங்கவில்லை…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீரபாண்டி-தேனி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எனக்கு பணம் தருவியா மாட்டியா?… வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தொழிலாளியை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான மரியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தங்கச்சி மகனான ஜெயக்குமார் என்பவர் மரியதாசிடம்  பணம் கேட்டுள்ளார். ஆனால் மரியதாஸ் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் கல்லால் மரியதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடும்ப பிரச்சினையில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாலமுருகனுக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல் நேற்றும் 2  பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் கோபித்து கொண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி…. அறிவித்த அதிகாரிகள்….!!!!

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கும்பக்கரை என்ற அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து  சுற்றுலா பயணிகள் குளிக்க வருவது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது  அருவியில்  நீர் வரத்து  குறைந்துள்ளதால் மீண்டும் சுற்றுலா பயணிகள்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட மரவள்ளிக்கிழங்கு…. சூறையாடிய யானை…. பொதுமக்கள் அளித்த புகார்….!!!!

தோட்டத்திற்குள் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆனால் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதோடு மட்டும் இல்லாமல்  13 தோட்ட காவலாளிகளையும் கொன்றுள்ளது. இந்நிலையில் ஆசை என்பவர்  தனது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை பயிரிட்டுள்ளார். இதனையடுத்து  நேற்று வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் ஓட்டம்”…. போலீஸ் தடுத்து நிறுத்தம்….!!!!

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் ஓட்டம் நடத்த முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே லோயர்கேம்ப் வண்ணான்துறை என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டப்பட்டு மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் புதிய திட்டம் செயல்படுத்துவதற்காக சென்ற மாதம் 18ஆம் தேதி அதிகாரிகள் பூமி பூஜை செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றது. இதற்கு விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

” முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம்”… சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு…!!!!!

முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு பயிற்சி தேர்வானது நடைப்பெற்றதில் தேனி மாவட்டத்திலும் நான்கு மையங்களில் நடந்தது. இத்தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று இணையத்தில் வெளியானதில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தட்டச்சு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய சரவண புவனேஷ் என்ற மாணவன் முதுநிலை ஆங்கில […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெம்பக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பதும் மேலும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையில்… தமிழக அரசு வக்கீல் குழுவினர் ஆய்வு….!!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வக்கீல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகம் – கேரளா மாநில எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு நீராதாரமாக திகழ்கின்றது. இந்த அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக தேக்கி வைத்துக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு 152 அடி வரை நீர் மட்டத்தை அதிகரித்துக்கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன்படி கடந்த […]

Categories

Tech |