கணவன் மனைவி இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள ராக்காச்சி அம்மன் கோவில் தெருவில் முத்துசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதம் முன்பு வனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அடிக்கடி சண்டை வந்ததால் வனிதா கூடலூரில் உள்ள […]
