தேனி மாவட்டத்தில் ஆற்றில் அடித்து சென்ற மகளை காப்பாற்ற நினைத்த பெற்றோர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுங்கம் தெருவில் அபுதாகீர்(49), அவரது மனைவி அமீனா பேகம்(40), மற்றும் அவர்களது மகள் அனிஷா(12) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபுதாகீர் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் 3 பெரும் சீலையம்பட்டியில் உள்ள முல்லை பெரியாற்று தடுப்பணையில் குளிப்பதற்காக 2 தினங்களுக்கு முன் சென்றுள்ளனர். அப்போது […]
