சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (பிப்.10) முதல் மாலை 6- காலை 6 மணி வரையிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்விவகாரத்தில் சொக்கலிங்கம் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை ஆகிய விலங்குகளும் இருக்கின்றன. இந்த சரணாலயத்தின் […]
