திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்தார். அவர்களுக்கு ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதன் பிறகு நரிக்குறவ இன மக்களுடன் சேர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அவர்களின் வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். இதை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய […]
