சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. […]
