தேசிய பங்குச் சந்தையின் முன்னால் செயல் இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் இயக்குனராகவும் விளங்கியவர் ஆனந்த் சுப்ரமணியன். கடந்த 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச்சந்தையில் நிர்வாக இயக்குனராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலையை சேர்ந்த ஒரு யோகியின் ஆலோசனையை கேட்டு தேசிய பங்குச்சந்தையில் பல முக்கிய முடிவுகளை எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. […]
