திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 30-வது ஆண்டு நிட்பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய இயக்குனர்கள் எனக்கு பாடமும் நடத்தி பணமும் தந்தனர். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. […]
