Categories
தேசிய செய்திகள்

கம்மியான வட்டியில் தனி நபர் கடன்…. எப்படி தெரியுமா?…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

மிக கம்மியான வட்டியில் தனிநபர் கடன் பெறுவதற்குரிய வழிமுறைகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக ஆன்லைனில் பல கடன் வழங்குபவர்களின் வட்டி விகிதங்களை சரி பார்த்து ஒப்பீடு செய்த பிறகே, கடன் பெறவேண்டும். இதற்கிடையில் ஆன்லைன் நிதிச் சந்தைகளானது சிறந்த கடன் வழங்குவோரின் தனிப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை காட்டுகிறது. வாடிக்கையாளரின் முந்தைய செயல் நடவடிக்கைளை பொறுத்துதான் கம்மியான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. முன்னதாக நீங்கள் வாங்கிய கடன் தொகையை […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்கள்…. நல்ல வருமானத்தை பெறலாமா?…. இதோ முழு விபரம்….!!!!

புதிய ஜீவன் அமர் மற்றும் டெக்டெர்ம் போன்ற 2 புது டெர்ம் அஷ்யூரன்ஸ் திட்டங்களை LIC எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது ஜீவன் அமர், டெக்டெர்ம் ஆகிய இரண்டும் நான்-லிங்க்ட் மற்றும் நான்-பார்ட்டிசிபேட்டிங் திட்டங்கள் ஆகும். இத்திட்டத்தில் பாலிசிதாரர்கள் நிலையான ப்ரீமியங்களை செலுத்துவதன் வாயிலாக சிறந்த வருமானத்தை பெற இயலும் என கூறப்பட்டு உள்ளது. பொதுவாக நான்-லிங்க்ட் திட்டம் எனில் ஆபத்தில்லாத மற்றும் பங்குசந்தை உடன் இணைக்கப்படாத உத்திரவாதமான வருமானத்தை தரக்கூடிய […]

Categories
தேசிய செய்திகள்

அத்தையை 10 துண்டாக வெட்டி…. சமையலறையில் மறைத்து வைத்த இளைஞர்…. காரணம் என்ன?…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் 11ம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

16 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. 8 பேரின் வெறிச்செயல்…. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சென்ற 16-ம் தேதியன்று இரவு வேளையில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்திருக்கின்றனர். அதாவது, சிறுமியை கடத்திய 8 பேர் கொண்ட கும்பல் கடற்கரை கிராமத்திலுள்ள பங்களாவுக்கு அழைத்துச் சென்று அவரை பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமியை கடற்கரைக்கு அழைத்து வந்து மீண்டும் பாலியல் வன் கொடுமை செய்து உள்ளனர். அதன்பின் அந்த கும்பல், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு சென்றதாக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. நீண்ட போராட்டத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி…. வெளியான தகவல்….!!!!

பிரபல ரவுடியான அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் பிரபல ரவுடியான  அபிஜீத் யாதவ் வசித்து வருகிறார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் இவரை போலீசார் கைது செய்ய தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் குறித்து தகவல் அளித்தால் 10  லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்தது. இந்நிலையில் போலீசாருக்கு காயா […]

Categories
தேசிய செய்திகள்

“பீகார் பாலம் விபத்து”…. 5 வருஷம் ஆகியும் திறப்பு விழா வைக்கல?…. காரணம் என்ன?…….!!!!!

பீகாரில் ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே இடிந்து விழுந்தது. இன்று காலை (டிச..18) பாலம் இடிந்து விழுந்தது பற்றி தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பீகார் மாநிலத்தில் தலைவிரித்தாடும் ஊழல் விஷயத்தை பாலம் உடைந்த சம்பவம் அம்பலமாக்கி விட்டதாக கூறப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக்கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

“வங்கிக் கடன் மோசடி”…. மெஹுல் சோக்ஸு மீது மேலும் 3 வழக்குகள்…. வெளியான தகவல்….!!!!!

மெஹுல் சோக்ஸுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் இருந்து சென்ற 2010ம் வருடம் முதல் 2018 வரை பல கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் இருந்ததாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதன் காரணமாக வங்கிகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.13,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் சோக்ஸி மீது சிபிஐ முதல் தகவலறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சோக்ஸிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்ற 2017ம் வருடத்தில் ஆன்டிகுவா-பாா்புடா […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் உடன் இணையும் கமல்ஹாசன்….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய தேசிய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் உடன் கூட்டணியை ஏற்படுத்தும் அடிப்படையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். ஆகவே இதன் வாயிலாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை”…. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்…..!!!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சா்கள் கலந்துகொண்டனா். இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் பற்றி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியிருப்பதாவது “எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை. புதியதாகவும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. பருப்பு உமி மீது 5 % ஆக இருந்த ஜிஎஸ்டி இப்போது முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது. பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் […]

Categories
தேசிய செய்திகள்

தில்லி: “எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல்”…. காவல்துறை சிபிஐக்கு கடிதம்…..!!!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து காவல்துறை சிபிஐக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அதில் சர்வதேச காவல்துறையிடமிருந்து சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வந்திருக்கும் இ-மெயில் முகவரியின் இணைய சர்வர்கள் பற்றி சிபிஐ தகவல்களை சேகரித்துத் தரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தில்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவம்பா் 23ம் தேதி காலையில் தாக்குதலை எதிர்கொண்டு அதன் சா்வா்கள் முடங்கியது. அதன்பின் சர்வர்கள் மீட்கப்பட்டதன் வாயிலாக வெளி நோயாளிள் பிரிவு பதிவு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே!…. வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன் இதை செக் பண்ணுங்க?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! ஷாம்பூவால் நின்ற திருமணம்…. காரணத்தை கேட்டு ஷாக் ஆன பெற்றோர்…. என்னனு நீங்களே பாருங்க….!!!!!

வாலிபர் ஒருவர் மணப்பெண் திட்டியதால் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பகுதியில் இன்ஜினியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இன்னும் 2  நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில்  மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு சன்சில்க் ஷாம்பூ உள்ளிட்ட பல அழகு சாதன பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

மகள் கல்யாணத்துக்கு வரதட்சணையாக…. இப்படியொரு பரிசா?…. தந்தை செய்த செயல்…. சுவாரசியமான சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹமிர்பூரில் சென்ற டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும், கடற்படையில் பணியாற்றும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக மகளின் தந்தை பரசுராம் கூறியதாவது, “தன் மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதைவிட வேறு எதாவது பயன் உள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். மேலும் என் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

Marriage ஆகலனாலும் “2 குழந்தைகளுக்கு தாய்” …. இது எப்படி….? சூரத் பெண்ணின் அதிரடி முடிவு…. நீங்களும் பாருங்க….!!!!!

ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நான்புரா பகுதியில் 40 வயதுடைய டிம்பிள் தேசாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு  பெற்றோர் திருமணம் செய்வதற்காக வரன்களை பார்த்து வந்துள்ளனர். ஆனால் அவருக்கு  திருமணத்தில் நாட்டமில்லை என்றாலும், குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் அதே பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சென்று செயற்கை கருத்தரித்தல் முறையில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

“திருட்டுபோன அரசு வாகனம்”… மாட்டிக் கொண்ட பிச்சைக்காரர்!… விசாரணையில் வெளியான பகீர் தகவல்…. போலீஸ் அதிரடி….!!!!

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் ஜமால்பூரின் கீதா மந்திர் எஸ்டி பஸ் நிலையம் அருகில் முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலகம் இருக்கிறது. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுகாதார அலுவலரின் அரசு வாகனம் திடீரென திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் சாஹில் மக்சுத்கான் பதான் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கைதான […]

Categories
தேசிய செய்திகள்

11 பேர் விடுதலையை எதிர்த்து!… பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை…. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…..!!!!

குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் கடந்த  2008-ம் வருடம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் தண்டனை பெற்ற 11 பேரும் தங்களை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…. 18-ஆம் படி வழியாக தரிசிக்க அனுமதி…. தேவஸ்தானம் தகவல்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 18-ஆம்  படி வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 18-ஆம்   படி வழியாக ஓரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என ஒரு மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…!! 2 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிவிட்டு தானும் குதித்த வாலிபர்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

வாலிபர் ஒருவர் தனது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கல்கஜி பகுதியில் மண் சிங்-பூஜா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2  வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மண் சிங், பூஜா ஆகிய 2  பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது அதேபோல் மண் சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

100-வது நாளை நெருங்கிய ராகுல் காந்தியின் பாதயாத்திரை!… பாஜக நினைத்தது நடக்கல!… காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரக்கூடிய பாரத் ஜோடோ யாத்திரை நேற்று (டிச.16) ராஜஸ்தானிலுள்ள தௌசாவில் 100வது நாளை நெருங்கியுள்ளது. முன்னதாக ராகுல்காந்தி சென்ற செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவரான கே.சி.வேணு கோபால் கூறியிருப்பதாவது “மக்களின் பிரச்சனைகளை இந்த பாதயாத்திரை முன்னிலைப்படுத்தியது பெரிய சாதனை ஆகும். மேலும் இந்த பயணம் 100வது நாளை நெருங்கியுள்ளது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“காதலியை டார்ச்சர் பண்ண தலைமையாசிரியர்”… கடுப்பான காதலனின் கொடூர செயல்…. நொடியில் பறிபோன உயிர்…. பயங்கர சம்பவம்….!!!!

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தில் பச்பேடி அரசு பள்ளியில் பிரதீப் ஸ்ரீவஸ்தவா(61) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் டிசம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் தன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து தலைமை ஆசிரியர் வீட்டின் வாயிலுக்கு சென்றபோது அவரை தடுத்து நிறுத்திய வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின் அந்த வாலிபர் தலைமை ஆசிரியரை சுத்தியல், கத்தி போன்றவற்றால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: காணாமல் போன 8 வயது சிறுமி சடலமாக மீட்பு!… விசாரணையில் சிக்கிய சிறுவன்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?….!!!!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வசித்து வந்த 8 வயது சிறுமி திடீரென சென்ற வாரம் காணாமல் போய்விட்டார். இதையடுத்து காவல்துறையினர் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகிலுள்ள காலி இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் அவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். அதனை தொடர்ந்து சந்தேகத்தின்படி 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவல் !!…. நடிகர் செந்திலை மிஞ்சிய வாலிபர்…. ஆடிப்போன போலீசார்… என்னனு நீங்களே பாருங்க….!!!!

மதுவை நூதன முறையில் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மதுவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு  சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சட்டத்தை மீறி மது அருந்தி தினம்தோறும் ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.27 லட்சம் பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் தனது உடலில் செல்லோ டேப்பைப்  பொருத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

வார்த்தையால் சொல்ல முடியாத மகிழ்ச்சி… அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அணிலுக்கு மறு உயிர் கொடுத்த ஊழியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். கேரளா  மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டத்தில்  அமைந்துள்ள சூரநாடு மின்வாரியத்தில் ரெகு, விஜீ என்ற 2  ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து   வந்துள்ளனர். அப்போது அணில் ஒன்று அங்கு அமைந்துள்ள மின்கம்பியில் நின்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிலை மின்சாரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒரு ஆவணமாக இருக்கிறது. ஆதார் கார்டு வாயிலாக பல்வேறு அரசு திட்டங்களில் சேரலாம். தற்போது மிகவும் எளிய முறையில் உங்கள் ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்வோம். # உங்களது ஆதார் கார்டில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு போகவேண்டும். # தற்போது மொபைல் எண்ணை புதுப்பிக்க உங்களுக்கு எந்த வகையான ஆவணமும் தேவை இல்லை. # […]

Categories
தேசிய செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை…. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…..!!!!

மத்தியபிரதேசம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் அதிசயம் என்னவெனில் அந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்து உள்ளது. அதிசய நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள், மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் குழந்தையும், தாயும் நலமுடன் இருக்கின்றனர். இதற்கிடையில் கூடுதலாகவுள்ள அந்த குழந்தையின் 2 கால்கள் செயல் இழந்த நிலையில் இருக்கிறது. அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! போலீஸ் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திருடர்கள்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்….!!!!!

 வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வாகன திருட்டுகள் நடைபெற்று வருகிறது. தங்களது வாகனத்தை இழந்த மக்கள் காவல் நிலையங்களில் தினம் தோறும் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு  சூரியபேட்டை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண்…. மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்த சோகம்…. பரபரப்பு….!!!!

ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒரு பெண் தன் சிறுநீரகத்தை ரூபாய்.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அப்பெண் கடனை அடைப்பதற்காக தன் சிறுநீரகத்தை விற்க முயன்ற போது மோசடி செய்பவர்களிடம் ரூ.16 லட்சத்தை இழந்தார். இதையடுத்து உதவிகோரி அந்த பெண் போலீஸ் நிலையத்தை அணுகியதை அடுத்து இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்தது. அப்பெண் நர்ஸிங் மாணவி எனவும் அவரது தந்தையின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அந்த தொகையை திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!…. கடவுள் கிருஷ்ணரை திருமணம் செய்த பெண்…. காரணம் என்ன?….!!!!!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலுள்ள நர்சிங்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங்(30). இவர் முதுகலை பட்டம் வென்றவர் ஆவார். கடந்த 8ம் தேதி இவர் கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்டார். இவரது தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். பூஜாவின் தந்தைக்கு கிருஷ்ணர் உடனான திருமண நிகழ்ச்சியில் உடன்பாடில்லை. இதனால் அவர் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. எனினும் பூஜா சிங்கின் தாயார், அவருக்கு முழுவதுமாக துணைநின்று திருமணத்தை செய்து வைத்துள்ளார். கிருஷ்ணர் சிலை முன்பு பூஜை சடங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

8.1 சதவீத வட்டி கிடைக்குமா?…. மத்திய அரசின் சூப்பர் பாதுகாப்பான திட்டம் இதோ…..!!!!….

அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் ஒன்றுதான் பிஎப் ஆகும். பிஎப் வாயிலாக அரசு வேலை செய்யும் மக்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த சேமிப்பு தொகையை ஓய்வுகாலத்தில் பயன்படுத்தலாம். EPF-ல் பங்களிக்கும் அனைத்து பணியாளர்களும் பல முறைகளைப் பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். கணக்கிலுள்ள நிலுவையை கண்டறிய, ஆண்டின் இறுதியில் பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி (EPF) விவரங்களை பகிர்ந்துகொள்வதற்காக அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“சுற்றுலா ரயில் திட்டம்”…. 30% கட்டணம் குறைவு?…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC) சார்பாக இயங்கிவந்த “பாரத் தர்ஷன்” சுற்றுலா ரயில் திட்டம் சென்ற 2019ம் வருடம் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து  புது கொள்கை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய “பாரத் கவுரவ்” என்ற புது சுற்றுலா ரயில் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கப்பட்டது. எனினும் பழைய திட்டத்தை விடவும் இத்திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் நியாயமான கட்டணத்தில் பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“அவங்களுக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்”…. -பிரதமர் நரேந்திர மோடி….!!!!!

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். சென்ற 1971 ஆம் வருடம் பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் அடிப்படையில் ஆண்டுதோறும் டிச..16 ஆம் தேதி விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் தன் சுட்டுரை பதிவில், “1971ல் நடந்த போரில் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த துணிச்சல்மிக்க அனைத்து ஆயுதப்படை வீரர்களுக்கும் விஜய் திவாஸான இன்று மரியாதை செலுத்துகிறேன். நாட்டைப் பாதுகாப்பாக வைத்து இருப்பதில் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரியை…. அந்த 6 மாநிலங்கள் குறைக்கவில்லை?… மத்திய அமைச்சா் தகவல்….!!!!

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மேற்குவங்கம், ஜாா்க்கண்ட் போன்ற பா.ஜ.க ஆட்சி அல்லாத 6 மாநிலங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) குறைக்கவில்லை. ஆகவே இந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது என பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா். இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் இவ்வாறு கூறினார். இதற்கிடையில் சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷத்தில் 177 செயற்கைக்கோள்களை செலுத்திய இஸ்ரோ…. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின் போது விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் “கடந்த 5 வருடங்களில் 19 நாடுகளின் 177 செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) வா்த்தக ரீதியாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். இதன் வாயிலாக 9.40 கோடி டாலரும் (சுமாா் ரூ.778 கோடி), 4.60 கோடி யூரோவும் (சுமாா் ரூ.407 கோடி) அந்நியச் செலாவணியாகக் கிடைத்திருக்கிறது. விண்வெளி குறித்த நடவடிக்கைகளில் தனியாா் நிறுவனங்கள் ஈடுபடுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

நமக்கு சோறு தான் முக்கியம்!… 1 நிமிடத்தில் இத்தனை ஆர்டரா?… இந்தியாவில் டாப்ல இருக்கும் பிரியாணி….!!!!!

இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனமானது வெளியிட்டு உள்ளது. அந்த வகையில்  நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது. அதன்படி ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. அத்துடன் மசால் தோசை, சிக்கன் ப்ரைடுரைஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. மேலும் வெளிநாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஒவ்வொரு வருடத்தை போன்று இந்த முறையும் ஊழியர்களின் அகவிலைப்படி ஜனவரி மாதத்தில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஒவ்வொரு வருடமும் 2 முறை அதிகரிக்கப்படுகிறது. அதாவது, முதல் முறை ஜனவரி மாதத்திலும், 2வது ஜூலையிலும் டிஏ அதிகரிப்பு வழங்கபடுகிறது. முன்னதாக ஜூலை மாத அகவிலைப்படி செப்டம்பர் 2022ல் அதிகரிக்கப்பட்டது. தற்போது அடுத்த அதிகரிப்பு குறித்த எதிர்பார்பானது அதிகரித்து உள்ளது. இது 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஜனவரி 1ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

யார் அந்த பப்பு?…. எங்கே இருக்கிறார்?…. மக்களவையில் பதிலளித்த நிர்மலா சீதாராமன்…..!!!!

மக்களவை விவாத கூட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மொய்த்ரா பேசியதாவது, இந்தியாவில் ஆளும் பா.ஜ.க அரசு தான் “பப்பு” என்ற வார்த்தையை உருவாக்கியது. இப்போது யார் உண்மையான பப்பு என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக பா.ஜ.க அரசு காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தியை பப்பு என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இந்த சொல் மக்களவையில் பல்வேறு கட்சியினரால் உபயோகிக்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய […]

Categories
தேசிய செய்திகள்

பதவியேற்ற நான்கே மாதங்களில்…. வாட்ஸ்அப் பே செயலியின் இந்திய தலைவர் எடுத்த திடீர் முடிவு…..!!!!!

WhatsApp வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் வாட்ஸ்அப் பே வசதியை சென்ற 2020ம் வருடம் அந்நிறுவனம் துவங்கியது. இச்சேவையை மில்லியன் கணக்கான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். WhatsApp பயனர் ஒருவர் தன் காண்டாக்ட்டிலுள்ள ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் இந்த வாட்ஸ்அப் பே செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த WhatsApp pay செயலியின் இந்திய தலைவராக வினய்சோலட்டி என்பவர் சென்ற செப்டம்பர் மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் வினய்சோலட்டி திடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நிலச்சரிவு எதிரொலி!… 140 பேர் பரிதாப பலி…. அச்சத்தில் பரிதவிக்கும் மக்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் தலைநகர் கின்ஷாசாவில் சென்ற சில தினங்களாக பெய்த கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கையானது 140 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மழை வெள்ளதால் 40 ஆயிரம் வீடுகள் நீரில் மூழ்கியது. இதுவரையிலும் மீட்கப்பட்டவர்களை தவிர்த்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்!!…. 10 ரூபாய்க்காக உயிர் நண்பனை இப்படியா பண்ணனும்…? கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

10  ரூபாய்க்காக நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு பகுதியில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய  விசாரணையில் அதிர்ச்சி தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு புகுந்து சிறுமியை கட்டிங் பிளேடால் தாக்கிய நபர்…. என்ன காரணம் தெரியுமா?…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

வீடு புகுந்து மாணவியை மர்ம நபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள உஸ்மான்பூர் பகுதியில் 10-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர்  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் வீட்டில் சிறுமி   தனியாக இருந்து படித்துள்ளார். அப்போது  திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சிறுமியின் தலயில்  கட்டிங் பிளேடால்   சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி  இரத்த வெள்ளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. இனி விமான நிலையங்களில் நெரிசல் இருக்காது…. மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிரடி முடிவு….!!!!

மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நமது இந்தியாவில் உள்ள   விமான நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது டெல்லி, மும்பை உள்ளிட்ட  விமான நிலையங்களில் அதிக அளவில் பயணிகள்  வருகின்றனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் விமான நிலையங்களில் அலைமோதும் கூட்டங்களை சிலர் வீடியோ  எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் கூட்டு […]

Categories
தேசிய செய்திகள்

OMG: மது வாங்க பணம் தர மறுத்த “பக்கத்து வீட்டு பெண் படுகொலை”…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள டோம்பிலி  பகுதியில் 44 வயதுடைய மஸ்தூத் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரிடம்  அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் குடிப்பதற்காக அடிக்கடி பணம் கேட்பது வழக்கம். அதேபோல் நேற்றும்  அந்த நபர்  பணம் கேட்டுள்ளார். ஆனால் மஸ்தூத்  பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் கத்தியை கொண்டு மஸ்தூத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு பயங்கர சம்பவம்!…. மாணவரை கொன்று உடலை 3 பாகங்களாக வெட்டிய கொடூரன்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரப்பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடிநகர் பகுதியில் உமேஷ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் ஆராய்ச்சி மாணவரான அன்கித் கோகார் என்பவர் தங்கி பயின்று வந்துள்ளார். அவர் லெக்னெள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அன்கித்தின் பெற்றோர் சென்ற சில மாதங்களுக்கு முன் இறந்துள்ளனர். இதையடுத்து பாக்பாத் பகுதியிலிருந்த அவர்களின் பூர்விகசொத்தை அன்கித் விற்பனை செய்துள்ளார். இதன் வாயிலாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அதன்பின் பெற்றோர் துணை இன்றி தனியொருவராக பயின்று […]

Categories
தேசிய செய்திகள்

சாத்வீக உணவு சேவை…. ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சுத்தமான சைவ உணவு (சாத்வீக உணவு) உண்பவர்களுக்காக ரயில்வேயில் புது ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரயில்வே அமைச்சகத்தின் புது உத்தரவுக்கு பின், இனிமேல் ரயில் பயணத்தின் போது முற்றிலும் சாத்வீக உணவைப் பெறமுடியும். இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான IRCTC, பயணத்தின் போது பயணிகளுக்கு சாத்வீக உணவை வழங்க இஸ்கானுடன் கைகோர்த்து உள்ளது. இதன் கீழ் சாத்வீக உணவு உண்ணும் பயணிகளுக்கு இஸ்கான் கோயிலின் கோவிந்தா ரெஸ்டோரன்ட் என்ற உணவகத்தில் ஆர்டர் செய்ததை அடுத்து, அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வாயிலாக… இந்தியாவுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு?….. வெளியான தகவல்….!!!!!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மொத்த ஆன்லைன் வருவாய் கட்டணம் விதிக்கப்படுவதால் பல்வேறு நாடுகள் பயன் பெறுவதாக லக்‌ஷ்மிகுமரம் மற்றும் ஸ்ரீதரன் சட்ட நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் “பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு அவர்களது லாபத்தில் வரிவிதித்து வந்தது. அந்நாடுகள் இப்போது மொத்த ஆன்லைன் வருவாய் கட்டண முறைக்கு மாற முடிவுசெய்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இப்போது 18% GST செலுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக அரசுக்கு வருடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

CBSE மாணவர்களே உஷார்!… யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

CBSE மாணவர்களுக்கு மீண்டும் பழைய முறையில் நடப்பு வருடத்துக்கான (2022-2023) பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு வருடத்துக்கான CBSE வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் துவங்கவும் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் CBSE வாரிய தேர்வர்களிடமிருந்து பதிவுக்கட்டணம் வசூலிக்கும் போலி இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து PIB கூறியிருப்பதாவது, https://cbsegovt.com என்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!…. மதுபோதையில் இப்படியா பண்ணனும்?…. 2 பேரின் வெறிச்செயல்…. பரபரப்பு புகார்….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள பரித்பூர் பகுதியில் குடிபோதையில் 2 நபர்கள் நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வால்களை வெட்டி மதுபானத்துடன் சாப்பிட்டதாக பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் (பிஎஃப்ஏ) மீட்புப் பொறுப்பாளர் தீரஜ் பதக் என்பவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “பரித்பூரில் வசிக்கும் முகேஷ் வால்மீகி என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது போதை தலைக்கேறியதால் இருவரும், அங்கே இருந்த 2 நாய்க் குட்டிகளின் காதுகள் மற்றும் வாலை வெட்டி மதுகுடிக்கும் போது சைட்டிஷ்ஷாக சாப்பிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்!…. 6 மாதங்களில் இத்தனை முறை விபத்தா?…. மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவின் புல்லட் ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பதில் அளித்தார். அதாவது, சென்ற 6 மாதங்களில் வந்தே பாரத் ரயிலானது 68 முறை விலங்குகள் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் ஒரு முறை பிரேக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நம் நாட்டில் பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், வந்தேபாரத் உட்பட 20-க்கும் அதிகமான ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“எம்பிஎப்” செயலி மோசடி வழக்கு…. 51 கோடி ரூபாய் முடக்கம்… மாஸ் காட்டிய அமலாக்கத்துறை….!!!!!

மோசடிக்கு காரணமானவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பல கோடி ரூபாய்  முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கும்பல் எம்பிஎப் என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் அந்த செயலியை  தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து முதலீடு  செய்தனர். ஆனால் மக்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் செயலியை செயலிழக்கச்  செய்துவிட்டு தப்பித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1 மாதத்திற்கு டோல்கேட் இலவசம்!… எங்கென்னு தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் டிச..15 இன்று முதல் ஜன்..15 வரை 1 மாதத்துக்கு விவசாயிகளுக்கு அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக்க கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி முடிவு செய்திருக்கிறது என மாநில பொதுச் செயலாளரான சர்வான்சிங் பாந்தர் தெரிவித்து உள்ளார். விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) பிரச்சனைகளில் மத்திய-மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டிய சர்வான்சிங் பந்தேர், இன்று முதல் ஜனவரி 15 வரை சுங்கச்சாவடிகளை இலவசமாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். காலை 11 மணி முதல் மதியம் […]

Categories

Tech |