Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியல்…. முதலிடத்தை தக்க வைத்த பிரதமர் மோடி….!!!!

தி மார்னிங்கன்சல்ட் நிறுவனமானது உலகிலேயே மிகவும் பிரபலமடைந்த தலைவர்களின் பட்டியலை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. இப்பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது, அந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 % பேர் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். 2-வது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூரஸ் மானுவல் லோபஸ் 63 % , 3-வது இடத்தில் இத்தாலி பிரதமர் மரியோ டிராஹி 54 %, 4-வது இடத்தில் பிரேசில் அதிபர் போல்சனரோ 42 %, 5-வது இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பைக்குள் இருந்த மாணவியின் சடலம்…. பின்னணியில் இருப்பது யார்?…. மராட்டியத்தில் பயங்கரம்….!!!!

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம், மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகில் பை ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் இது தொடர்பாக வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாணவி உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து மாணவி உடல் வசாய் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடகொடுமையே!…. ஆண் நண்பருக்காக சண்டை போட்ட சிறுமிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மராட்டியத்தின் பைத்தன் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய, கூட்டம் நிறைந்த பேருந்து நிலையம் ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி ஒரு வேலையாக வந்துள்ளார். இதற்கிடையில் அந்த ஆண் நண்பருக்கு மற்றொரு தோழியும் இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒன்றாக செல்வது பற்றி தகவலை அறிந்த மற்றொரு சிறுமி உடனே புறப்பட்டு அவர்களை தேடி சென்றுள்ளார். இதையடுத்து அவர்களை கண்டறிந்த அச்சிறுமி மற்றொரு சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடியிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

சமூகவலைத்தள பழக்கம்: ஏமார்ந்து போன மாணவிகள்…. மாட்டி கொண்ட 3 பேர்…. சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் ஒரு கன்னியாஸ்திரிமடம் இருக்கிறது. இங்கு உள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளேயிருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 3 பேரும் அங்கு தங்கி படித்து வரும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்போர்ட்டிற்கு துப்பாக்கி குண்டு எடுத்து சென்ற ஆசிரியருக்கு…. இப்படி ஒரு தண்டனையா?…. அதிரடி உத்தரவு….!!!!

டெல்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு ஆசிரியர் ஒருவர் தனது துப்பாக்கி குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளார். இதை கண்டறிந்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தன் மீதுள்ள வழக்குப்பதிவை நீக்ககோரி ஆசிரியர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அவற்றில், உத்தரகாண்டின் சமோலி நகரில் பள்ளியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2008-09 ஆம் ஆண்டில் சாலையில் நடந்து சென்றபோது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்தேன். இதையடுத்து அந்த […]

Categories
தேசிய செய்திகள்

WOW: மணிக்கு 180 கிலோ மீட்டர்!…. சாதனை படைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்….!!!!!

இந்தியாவின் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நவீன அம்சங்களுடன் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அதிவேகத்தில் செல்லகூடிய அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், குளிரூட்டப்பட்ட சேர் கார் வசதிகளுடன் கூடிய பெட்டிகள் இருக்கிறது. மேலும் 180 டிகிரி அளவுக்கு சுழலகூடிய திறன் படைத்த சுழலும் நாற்காலி ரயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயிலானது சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை பதிவுசெய்துள்ளது. இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஷ்வனி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!… செப்டம்பர் 7 ஆம் தேதி முதல்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓணம் பண்டிகையையொட்டி சபரி மலை ஐயப்பன் கோயிலில் அடுத்த மாதம் செப்டம்பர்7-ம் தேதிமுதல் 10ம் தேதி வரையிலும் சிறப்பு பூஜைகளானது நடைபெற இருக்கிறது. இதேபோன்று புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்த தினங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு பம்பையில் உடனடியாக முன்பதிவு செய்ய தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்வது எப்படி….? கூகுளில் இப்படி எல்லாமா தேடுவீங்க…. அதுக்கு இப்படியா….?

பெற்றோருக்கு விஷம் கொடுத்த மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் சந்திரன்-ருக்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்துலேகா என்ற மகள் இருக்கிறார்.இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இந்துலேகா ஆடம்பர வாழ்க்கையை விரும்பியதால் தன்னுடைய கணவருக்கு தெரியாமல் 50 சவரன் நகைகளை வங்கியில் அடகு வைத்து தோழிகளுடன் சினிமா, ஹோட்டல் என ஜாலியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்துலேகாவின் […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 34 ஸ்கூல்…. ஒருத்தர் கூட பாஸ் ஆகல…. அரசு எடுத்த அதிரடி ஆக்ஷன்…!!!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. அசாம் மாநிலத்தில் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதோடு 2 வருடங்களாக தேர்வு நடைபெறாமல் இருந்ததால் அனைவரையும் ஆல்பாஸ் செய்ததும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது […]

Categories
தேசிய செய்திகள்

டிஜிட்டல் கரன்சி!…. இந்த ஆண்டே வரப்போகுது….. ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சி….!!!!!

இந்தியாவின் சொந்த டிஜிட்டல் பணத்தின் முதல் அறிவிப்பு கடந்த 2002 பட்ஜெட் சமர்ப்பணத்தின்போது வெளியிடப்பட்டது. டிஜிட்டல் கரன்சி என்றால் என்ன?, கிரிப்டோ கரன்சியா எப்படி மாற்றப்படும், ரூபாய்க்கு மாற்றாக இருக்குமா?, விலை நிலையாக இருக்குமா? என்ற சந்தேகம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் தற்போது ரசர்வ் வங்கி டிஜிட்டல் நாணயம் (அல்லது) CBDC என்றால் என்ன என்பதிலுள்ள சந்தேகங்களை விளக்கி வருகிறது. முதல் முறையாக டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்போது, ​​முறையான திட்டத்தை தயாரித்து பொருளாதாரத்தில் கொண்டுவர ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

அட இது தெரியாம போச்சே….! யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க….. ஜாலியா தூங்கலாம்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க….!!!!

இந்தியாவில் போக்குவரத்து என்பது மக்களின் இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. இந்த போக்குவரத்து சேவையில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் பயணிகள் வசதியாக செல்வதுடன் கட்டணமும் குறைவாக வசூலிக்கப் படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் ரயிலில் செல்வதால் ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இரவு நேர பயணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய வசதியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு குறித்த RBI-யின் புது விதிமுறைகள்…. அக்டோபர் முதல் கட்டாயம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

டெபிட்கார்டு மற்றும் கிரெடிட்கார்டு குறித்த ரிசர்வ் வங்கியின் புது விதிமுறைகள் அனைத்துமே அக்டோபர்மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவேண்டும் என்று கார்டு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. முன்பாக இதுபற்றிய விதிகளை உருவாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளை ஜூலை 1ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில விதிமுறைகளை நடைமுறைபடுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கார்டு நிறுவனங்கள் கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் கவுரவத்தொகை திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

பிரதமரின் கவுரவத் தொகை திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்கவேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் “பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவத் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு 3 தவணையாக தலா ரூபாய்.2 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பதிவுசெய்துள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் சிறந்த திருக்குறள் மொழிப்பெயர்ப்பு…. கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு….!!!!!

டெல்லி லோதி எஸ்டேட்டிலுள்ள தமிழ் கல்விக் கழகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சுமார் 51/2 அடி உயரம் மற்றும் ஆயிரத்து 500 கிலோ எடை உடைய இந்த திருவள்ளுவர் சிலை வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, திருக்குறள் என்பது பக்தி,வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். ஜி.யோ.போப்பின் மொழி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 20 கோடிக்கு டீல்…. ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை வாங்க பலே திட்டம்…. பாஜக மீது முதல்வர் கடும் சாடல்….!!!!

எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழக்க பாஜக திட்டமிடுவதாக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் உள்ள முதலமைச்சரின் வீட்டில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கலந்து கொண்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 53 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக குறி வைத்துள்ளது. நம்முடைய கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை ரூபாய் 20 கோடிக்கு பாஜக விலை பேச […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகளுக்கான காப்பீட்டு திட்டம்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

திருநங்கைகளுக்கான காப்பீடு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மத்திய அரசாங்கம் திருநங்கைகளின் நலனுக்காக ஆயுஷ்மான் பாரத் டிஜி என்னும் சுகாதார காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த காப்பீடு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கையெழுத்து ஆகியுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்தின் படி திருநங்கைகளுக்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டில் இணைந்து பயன்பெற விரும்பும் திருநங்கைகள் அரசின் சான்றிதழ்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…. யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

யுபிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. இந்த மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும் போதும் தங்கள்  விவரங்களை பூர்த்தி செய்வதால் நேரம் வீணாகிறது என்றும், தவறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாக யுபிஎஸ்சி நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒருமுறை மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை பார்க்க சென்ற வாலிபர்….. பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மசாபூர் என்ற கிராமத்தில் அங்கித் என்ற வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை அங்கித் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கித் தன்னுடைய காதலியை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாலிபரை வீட்டிற்குள் அடைத்து வைத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

PM கிசான் திட்டம்…. 12-வது தவணைத் தொகை…. உடனே இத செய்யுங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி கிசான்  சம்மான் நிதி யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6,000 வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தவணைக்கும் 2,000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்படி மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி முதல் தவணை ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும்.‌ அதன் பிறகு‌ […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளின் விபரங்களை விற்க போறீங்களா?…. விளக்கம் கேட்ட நாடாளுமன்ற குழு….!!!!

இந்திய ரயில்வேயின் உணவு வழங்கல் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., ஆன்லைனில் பயணிகளுக்கான டிக்கெட் முன் பதிவு வசதியை அளிக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி. பயனர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேல் ஆகும். அவர்களில் 7.5 கோடி பேர் இதன் இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஆவர். இந்த நிலையில் தங்களது பயணிகள் மற்றும் சரக்கு வாடிக்கையாளர் விபரங்களை பணமாக்குவதற்கு ஆலோசகருக்கான டெண்டரை ஐ.ஆர்.சி.டி.சி. வெளியிட்டு இருக்கிறது. அதன் வாயிலாக ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நொய்டா இரட்டை கோபுரம்…. 9 நொடியில் தரைமட்டம் ஆகிடும்…. நீதிமன்ற உத்தரவு….!!!!!

உத்தரப்பிரதேசத்திலுள்ள நொய்டாவில் சூப்பர் டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தை கட்டி இருக்கிறது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி உடைய இந்த குடியிருப்பில் இதுவரையிலும் யாரும் குடியேறவில்லை. ஒரு டவரில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 டவர்களும் இருக்கிறது. இந்த நிலையில் அந்த கட்டுமானமானது விதிகளுக்கு புறம்பானது என புகார் பெறப்பட்டது. இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், கடந்த வருடம் கட்டிடங்களை வெடி வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் திடீர் இறப்பு…. கெட்டுப்போன உணவுதான் காரணமா?…. போலீஸ் விசாரணை….!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான உறைவிடப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உணவு சாப்பிட்ட 8 மாணவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 2 மாணவா்கள் நேற்று உயிரிழந்தனா். அதாவது கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 2 மாணவர்களும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் 2 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தற்போது நாசிக் மாவட்ட மருத்துவமனையில் அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா். இதனிடையில் இறந்த மாணவா்கள் பிவாண்டியைச் சோ்ந்த ஹா்ஷல் போயிா் (23), நாசிக்கைச் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் யூடியூப் சேனல் திடீரென நீக்கம்…. என்ன காரணமாக இருக்கும்?…. பரபரப்பு….!!!!

காங்கிரஸ் யூடியூப் சேனல் நேற்று திடீரென்று நீக்கப்பட்டது. ஆனால் இதற்குரிய காரணம் இதுவரையிலும் தெரியவில்லை எனவும் தொழில்நுட்பக் கோளாறு (அல்லது) நாசவேலை காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு காங்கிரஸின் யூடியூப் சேனல் நீக்கப்பட்டது அக்கட்சிக்குள் பெரும் பரரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்க பதிவில் “இந்திய தேசிய காங்கிரஸ் எனும் தங்களது யூடியூப் சேனல் நீக்கப்பட்டு இருக்கிறது. நாங்களும் அதனை […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி வழக்கில் சிக்கி கொண்ட சப்னா சவுத்ரி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

அரியானாவை சேர்ந்தவர் பிரபல பாடகி சப்னா சவுத்ரி. இவர் நடனகலைஞராகவும் இருந்து வருகிறார். சப்னா சவுத்ரிக்கு வடமாநிலங்களில் பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். சப்னாவின் நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுக் கடங்காத கூட்டம் கூடுவது உண்டு. இதற்கிடையில் அவர் பாடல் ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார். மேலும் சப்னா சவுத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் பிரபலமானார். இந்நிலையில் சப்னா மீது லக்னோ நீதிமன்றத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2018-ல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சப்னா முன்கூட்டியே பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இலவச அரசி, கோதுமை இனி கிடைக்காது…. வெளியான தகவல்….!!!

நியாய விலை கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் மலிவான விரையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பயனடைகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி போன்றவைகள் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான கால […]

Categories
தேசிய செய்திகள்

“5 மணி நேரம்” 34 மாணவர்கள்…. ஒரே அறையில் அடைத்து வைத்து கொடுமை…. ஸ்கூல் பீஸ் கட்டாததால் நேர்ந்த கொடூரம்….!!!!

பள்ளி மாணவர்களை ஒரே அறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் காதிகியா என்ற பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் 34 மாணவர்கள் கட்டணம் செலுத்தாததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் 34 மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்துள்ளனர். இந்த மாணவர்களை 5 மணி நேரம் ஒரே அறையில் அடைத்து வைத்ததோடு, அவர்களை சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை. அதன் பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

“வீரசவார்க்கர் பேனர்” திடீரென வெடித்த வன்முறை…. 144 தடை உத்தரவு நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவமொக்கா பகுதியில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட வீரசாவர்க்கர் பேனர் அகற்றப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கிடையே கடுமையான தகராறு  ஏற்பட்டது. இந்த தகராறின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறையை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இருப்பினும் வன்முறையின் போது சிலருக்கு கத்திக்குத்து விழுந்ததால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தகராறு […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனை…. வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்….!!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் நாடு முழுவதும் யாத்திரை செல்வதற்கு திட்டமிட்டுள்ளார். இதன் முதற்கட்ட துவக்கமாக செப்டம்பர் 7-ம் தேதி ராகுல் காந்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முன்பாக செப்டம்பர் 4-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணி மனைவி….. கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

காவலர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ஆஷா தேவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மோகன்லாலுக்கும், ஆஷா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஐஎன்எஸ் விக்ராந்த்: என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம்தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. உள் நாட்டிலேயே கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2ம் தேதி இந்தியக்கடற்படையில் இணையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் ரூபாய். 20,000 கோடி செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் வாயிலாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது. 1,700 வீரர்கள் பயணிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கு 6 மாதத்திற்கு வாடகை இல்லை, 1 வருஷத்துக்கு முழு பாதுகாப்பு… வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெறுவோருக்கு 6 மாதங்களுக்கு வாடகை இல்லாமல் மாளிகை வீடு, ஒரு வருடத்திற்கு 24×7 நேரமும் பாதுகாப்பு வழங்கும் அடிப்படையில் நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவு 1959ல் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. மத்திய அரசு செய்த திருத்தங்களில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நாளில் இருந்து ஓராண்டுக்கு வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவரை அரசுச் செலவில் அமர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டிருக்கும் திருத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

7 வயது சிறுமி எரித்து கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பாகிஸ்தானின் கோசார் நகரில் மர்தான் பகுதியைச் சேர்ந்த கிருபா என்பவர் தன் 7 வயது மகள், அவரது தாய், பாட்டி, சகோதரியுடன் பக்கத்து வீட்டிற்குச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் அவளைக் காணவில்லை என்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதற்கிடையில் குர்ஆன் கவானியில் பங்கேற்ற தங்கள் அண்டைவீட்டு மாடியிலிருந்து எரிக்கப்பட்ட துர்நாற்றம் வருவதை அடுத்து குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது அங்கு எரிந்த கட்டிலைக் கண்டனர். அதன்பின் குடும்பத்தினர் அருகிலுள்ள கட்டுமானத்தின் வீட்டிற்கு விரைந்தனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரி முதல்வரை பா.ஜ.க ஆட்டிப்படைக்குது”…. நாராயணசாமி ஓபன் டாக்….!!!!

புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இது குறித்து நாராயணசாமி பேசியதாவது “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் ரூபாய்.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால் இவற்றில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டுவர எவ்விதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. சென்ற காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் கூறப்படுகின்றன. கடந்த வருடம் முதல்வர் கூறிய அம்சங்களும் இதில் வந்துள்ளது. ஸ்மார்ட்சிட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“காரைப் பார்த்து சாலை ஓரங்களில் உள்ள நாய்கள் குறைக்கும்”…. மத்திய இணை மந்திரி பரபரப்பு பேச்சு….!!!!!’

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள லகிம்பூர்கேரி பகுதியில் சென்ற வருடம் அக்டோபர் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க-வினர் சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற வன்முறையில் 8 பேர் இறந்தனர். இவற்றில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் இறந்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஐ.என்.எஸ். விக்ராந்த்”…. செப்டம்பர் 2-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு…. வெளியான தகவல்….!!!!

இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் எனும் விமானம் தாங்கி போர்கப்பல் கட்டப்பட்டுள்ளது. ரூபாய்.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்கமுழுக்க உள் நாட்டிலேயே இந்த போர் கப்பலானது தயாரிக்கப்பட்டது. கேரளா கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்குரிய கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. கப்பல் கட்டும் பணியானது முடிவடைந்ததை அடுத்து சோதனை ஓட்டம் நடந்தது. இதன் 4வது மற்றும் இறுதிகட்ட சோதனை ஓட்டம் சென்ற ஜூலை மாதம் 28ம் தேதி நடந்தது. சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணா மாணியின் 104-வது பிறந்தநாள்…. சிறப்பாக கொண்டாடும் கூகுள்….!!!

அண்ணா மாணியின் பிறந்த நாளை கூகுல் கொண்டாடுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள திருவிதாங்கூர் பகுதியில் கடந்த 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் அண்ணா மாணி பிறந்தார். இவர் ஒரு சிறந்த இயற்பியலாளர் மற்றும் வானிலை ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ஓசோன் அளவீடுகள், காற்றின் ஆற்றல், சூரியன் போன்றவற்றில் ஆய்வுகள் நடத்தி எண்ணற்ற அளவீடுகளை வெளியிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அள்ளிகிட்டு போகலாம்….! பண்டிகை கால ஷாப்பிங்….. என்னென்ன ஆபர்கள்….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

விழா காலங்கள் நெருங்குவதால் பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். உலக அளவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பரவியதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்கள் போன்றவைகள் முடங்கியது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்து அதன் காரணமாக பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை நடத்துவதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விழாக் காலங்கள் நெருங்குவதால், பொதுமக்கள் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக சர்வே முடிவுகள் கூறுகிறது. இதனையடுத்து தற்போது விழாக்காலங்களை முன்னிட்டு பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. முதன்முதலாக ஹைட்ரஜன் எரிபொருளில் புதிய பேருந்து சேவை…. எங்கு தெரியுமா….?

ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் முக்கியமான கடமையாக இருக்கிறது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது ஒரு கடமை என்றால், அதற்கான எரிபொருளை பெறுவது மற்றொரு சவாலாக இருக்கிறது. இந்த எரிபொருளை ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் அந்நிய செலவாணி கச்சா எண்ணெய்யிலே அதிக அளவில் செலவாகி விடுகிறது. இந்நிலையில் பெரும்பாலும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளை […]

Categories
தேசிய செய்திகள்

நுழைவு தேர்வு: வெளிநாட்டு மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்திய உயா் கல்வியின் தரத்தை வெளிநாடுகளில் பிரபலப்படுத்தும் அடிப்படையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு மாணவா்கள் இந்தியாவில் உயா் கல்வி பெறுவதை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக யுஜிசி கூட்டம் சென்ற வாரம் நடந்தது. அவற்றில் பல்கலைக்கழகங்களிலுள்ள இளநிலை, முதுநிலை படிப்புகளுக்காக முன்பே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வெளிநாட்டு மாணவா்களுக்காக கூடுதலாக 25 % இடங்களை ஒதுக்குவதற்குப் பல்கலைக்கழகங்களுக்கும் மற்ற உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் இந்தியாவில் உயா்கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

கால்நடைகளை குறிவைக்கும் பெரியம்மை…. 8 மாநிலங்களில் பரவிட்டு…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயால் அந்தமான் நிக்கோபாா் உட்பட 8 மாநிலங்களில் 7,300 க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா். கால்நடைகளின் தோலில் தோன்றும் கட்டிகளை அறிகுறியாக கொண்ட பெரியம்மை, கேப்ரிபாக்ஸ் எனும் தீ நுண்மியால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். இது ஈ, கொசு ஆகியவற்றால் கால்நடைகளுக்குப் பரவக்கூடியது ஆகும். இந்த நோயால் கால்நடைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம். மத்திய கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாநிலங்களில் மட்டும் அகவிலைப்படி உயர்வு…. அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது அகவிலைப்படி (DA) மற்றும் Dearness Relief (DR) உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சில மாநிலங்களிலுள்ள அரசு ஊழியர்கள் இம்மாதம் சுதந்திர தினத்தையொட்டி சம்பள உயர்வை பெற்றுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கரிலிருந்து குஜராத் வரை, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் இம்மாதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்தது. இதையடுத்து ஊதிய உயர்வு ஏற்பட்டது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு, ஒவ்வொரு வருடமும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO சந்தாதாரர்கள் EPF, EPS நியமன தாக்கல் செய்யணுமா?…. இதோ எளிய வழிமுறைகள்…..!!!!

தொழிலாளர்களுக்கு ஓய்வுக் காலத்தில் பயன் அளிக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்டகால சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் வாயிலாக தொழிலாளர்களுக்கு ஓய்வின்போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத்தொகை வட்டியுடன் அளிக்கப்படுகிறது. இதற்கென தொழிலாளர்கள் அவர்கள் பணிபுரியும் காலத்தின் போது, ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வைப்புநிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO-ன் பல நன்மைகளைப் பெற, உறுப்பினர்கள் தங்களது […]

Categories
உலக செய்திகள்

“எங்க அப்பாவை கூப்பிட ஆம்புலன்ஸ் வரல” பாதிக்கப்பட்ட நபருக்கு மிரட்டல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் தன் நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தவறான மற்றும் பொய்யான தகவலை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறி 3 பத்திரிகையாளர்கள் மீது மத்தியப்பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது பிந்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஏமாற்றுதல், பொதுத்தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008ன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ்…. வெளியான தகவல்….!!!!!

டெல்லி அரசின் புது மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சென்ற வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. சி.பி.ஐ-யின் முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட […]

Categories
தேசிய செய்திகள்

“ஷீனா போரா கொலை வழக்கு”… இந்திராணி டிரைவருக்கு ஜாமீன்…. ஐகோர்ட்டு உத்தரவு….!!!!

மும்பையை சேர்ந்த ஊடகநிர்வாகியான இந்தி ராணி முகர்ஜி தான் பெற்ற மகளான ஷீனா போராவை கொன்று உடலை எரித்த வழக்கு சென்ற 2015 ஆம் வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தி ராணியின் கார்டிரைவரான ஷியாம்வர் ராய் மற்றொரு வழக்கு ஒன்றில் சிக்கியபோது காவல்துறையினரிடம் மதுபோதையில் அளித்த வாக்குமூலத்தில், ஷீனா போரா கொலை ரகசியம் பற்றி உளறினார். இந்தி ராணி சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருந்ததால், காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு பின் அவரை அதிரடியாக கைது […]

Categories
தேசிய செய்திகள்

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு போக விதிக்கப்பட்ட தடை நீக்கம்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

ஜம்முவிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் திரிகுடாமலை உச்சியில் இருக்கும் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில் ரியாசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக அந்த கோவிலுக்கு போகும் யாத்திரை நேற்று மாலை முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் அந்த கோயிலுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு உள்ள நிலைமை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்துத்வா பா.ஜனதாவின் சொத்தா?…. பேட்டி கொடுத்த டி.கே.சிவக்குமார்….!!!!!

கர்நாடகா மாநிலத்தில் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல் மந்திரியாகயிருந்த சித்தராமையா, வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை உடைக்க முயன்றதுடன், தனிமத அந்தஸ்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பா.ஜனதா குற்றச்சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வீரசைவ-லிங்காயத் சமுதாய விவகாரத்தில் காங்கிரஸ் நடந்துகொண்டது பற்றி நான் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தேன். எந்தஒரு சமுதாய விவகாரத்திலும் கை வைக்ககூடாது என்பது என் கருத்தாகும். வீரசைவ-லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையாவும், ரம்பாபுரி மடாதிபதியும் பேசியது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

“திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்” 72 மணி நேரத்திற்குள் மட்டும் இவ்வளவு டிக்கெட் விற்பனை?… வெளியான தகவல்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் அக்டோபர் மாதத்துக்கான ரூபாய்.300 சிறப்பு கட்டண தரிசனம் டிக்கெட்டானது சென்ற 18ம் தேதி காலை 9 மணியளவில் வெளியிடப்பட்டது. நாளொன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட் வீதம் 24 தினங்களுக்கு 6 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் வெளியிட்ட 72 மணி நேரத்திற்குள்ளாக மொத்த டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டது. இதன் வாயிலாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு 18 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து இருக்கிறது. செப்டம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

“26/11” மும்பையில் தீவிரவாத தாக்குதல்…. பாகிஸ்தானில் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு….!!!

பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த குறுஞ்செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த தீவிரவாத தாக்குதலை பாகிஸ்தான் நாட்டிலிருந்து கடல் வழியாக வந்தவர்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பைக்கு அருகே உள்ள ஒரு கடற்கரையில் ஆளில்லாத கப்பல் ஒன்று கரை ஒதுங்கியது. அந்தக் கப்பலில் 3 ஏகே 47 […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்…. 16 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் காங்கிரஸ் எதிர்கட்சி தலைவராகவும் இருப்பவர் சித்தராமையா. இவர் சங்பரிவார் அமைப்பின் வீர் சவார்க்கரை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். இதன் காரணமாக சித்தராமையாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பாஜகவினர் சித்தராமையாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருப்புக் கொடி ஏந்தியும் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் குடகு பகுதிக்கு சித்தராமையா சென்றபோதும் அவருக்கு பல்வேறு […]

Categories

Tech |