Categories
தேசிய செய்திகள்

இவ்வளவு சிறப்பம்சங்களா?…. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரைவு மசோதா…. வெளியான தகவல்கள்….!!!

தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய வரைவு மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டின் மத்திய தொலைதொடர்பு துறை புதிய வரைவு மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் நமது இந்திய நாட்டில் தொலை தொடர்புகளை நிர்வகிக்கும் சட்ட கட்டமைப்பை மாற்ற நமது இந்திய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் 1885-ஆம் ஆண்டு இந்திய தந்தி சட்டமும், 1933-ஆம் ஆண்டு வயர்லெஸ் தந்தி சட்டம் மற்றும் தந்தி கம்பி சட்டமும் கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்காக 1950-ஆம் ஆண்டு ஒரு புதிய […]

Categories
தேசிய செய்திகள்

தசரா பொதுக்கூட்டம்: எப்படியாவது நாங்கள் நடத்திருவோம்!…. உத்தவ் தாக்கரே அணியினர் தகவல்….!!!!

பால் தாக்கரே காலத்திலிருந்து வருடந்தோறும் மும்பை சிவாஜி பார்க் பூங்காவில் சிவசேனா கட்சி சார்பாக தசரா பொதுக்கூட்டம் நடந்தது. இப்போது சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக் கூட்டம் நடத்துவதில் 2 அணிக்கும் இடையில் போட்டி நிலவியது. 2 அணிகள் சார்பாகவும் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அத்துடன் இருஅணியினரும் அந்த இடத்திற்கு மாற்றாக பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வளாகத்திலும், எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்திலும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிகோரி விண்ணப்பித்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

முதல் மனைவி தலைமையில் கணவருக்கு 2வது திருமணம்…. எதற்காக தெரியுமா?…. நம்ப முடியாத ஓர் அதிசயம்….!!!!

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக் டாக் மற்றும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு வீடியோக்கள் எடுப்பது வாயிலாக தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொடர்பு காதலாக மாறி சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இரண்டு பேருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இரண்டு பேருக்கும் டிக்டாக்கில் பின் […]

Categories
தேசிய செய்திகள்

சாப்பாடு சரியில்லன்னு சொன்னது குத்தமா?… காவலருக்கு நேர்ந்த கதி… மனதை உலுக்கும் சம்பவம்….!!!!

நாய் கூட சாப்பிடாது என தங்களுக்கு வழங்கப்படும் உணவைக் காட்டி கதறி அழுத காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத் பகுதியிலுள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத்தட்டுடன் உத்தரப்பிரதேசம் மாநில தலைமைக்காவலர் மனோஜ்குமார் பொதுமக்கள் முன்னிலையில் தன் துயரத்தை வெளிப்படுத்தினார். இதற்கென அவர் பிரோஸாபாத்தில் இருந்து 600 […]

Categories
தேசிய செய்திகள்

“எப்படிலாம் திருடுறாங்க” ஏடிஎம் மெஷினை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்….. ரூ. 12.10 லட்சம் அபேஸ்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

ஏடிஎம் மெஷின் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூரில் உள்ள சர்ச்சான்ப் கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஒரு ஏடிஎம் மெஷின் இருந்தது. இந்த ஏடிஎம் மெஷின் இருந்த அறையை மர்ம நபர்கள் உடைத்து அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை தூக்கி சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 12.10 லட்சம் இருந்துள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. சிறை கைதிகளுக்கு சூப்பர் சலுகை…. மாநில அரசு அதிரடி….!!!!

மனைவியுடன் தனிஅறையில் 2 மணிநேரம் செலவிடுவதற்கு கைதிகளுக்கு அனுமதி வழங்கும் சலுகையினை நடைமுறைபடுத்த பஞ்சாப் அரசானது திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. பஞ்சாப் சிறைத்துறையின் இம்முடிவு தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, பஞ்சாப் சிறைகளிலுள்ள கைதிகள் தங்களது மனைவி (அல்லது) கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் செலவிட அனுமதி வழங்க சிறைத்துறை முடிவு செய்துள்ளது. வருகிற 27ஆம் தேதி முதல் இது அமலுக்கு வர இருக்கிறது. நபா மாநகரிலுள்ள கோயிந்த் வால் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சேமிப்புக் கணக்கு, நடப்புக்கணக்கு என ஒருவர் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது பல்வேறு நேரங்களில் உதவிகரமாக இருக்கும். எனினும் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளை வைத்திருக்கும்போது வாடிக்கையாளர்கள் சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சொந்த ஊரில் உள்ள வங்கியில் முதலாவதாக துவங்கிய வங்கிக்கணக்கு, பின் மாத ஊதியம் வருவதற்கு பணியாற்றும் நிறுவனம் சொல்லும் வங்கியில் ஒரு சேமிப்புக்கணக்கு என பல்வேறு காரணங்களால் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளைத் தொடங்கும் நிலை உருவாகிறது. அவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறு…. பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய மனைவி…. வெளியான பகீர் தகவல்….!!!!!

ஆந்திரமாநிலம் கம்மம், பொப்பரானி கிராமத்த்தில் வசித்து வருபவர் ஜமீல் (45). இவர் பைக்கில் அவரது மகள் வீடு அமைந்துள்ள வல்லபீக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வல்லபீ கிராமத்தின் அருகில் சாலையில் ஒருவர் லிப்ட்கேட்டார். அதனை பார்த்த ஜமீல் பைக்கை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டு மீண்டும் வேகமாக சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் பின்னாடி இருந்த நபர் திடீரென்று ஜமீலின் முதுகில் ஊசிபோட்டார். தன் முதுகில் குத்தியதை உணர்ந்த ஜமீல் பைக்கை நிறுத்த முயற்சி செய்தார். எனினும் லிப்ட் கேட்டு வந்தவர் வாகனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் எண்ணில் மறைந்துள்ள விவரங்கள்…. எவ்வாறு கண்டுபிடிப்பது?…. இதோ முழு விபரம்….!!!!

இபிஎப்ஓ ​​சந்தாதாரர்களுக்கு பயன் உள்ள செய்தியிருக்கிறது. பல பணிகளில் வேலைபார்க்கும் பணியாளர்கள் அனைவருக்கும் தனித் தனி பிஎப்எண் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனிடையில் ஒவ்வொரு பிஎப் உறுப்பினரும் தன் பிஎப் கணக்கிலுள்ள பங்களிப்பைச் சரிபார்க்கலாம். நீங்கள் பெறும் பிஎப் எண்ணில் பல்வேறு தகவல்கள் மறைந்து இருப்பது உங்களுக்குத் தெரியுமா..? இதில் பிஎப்-ன் கணக்கு எண்ணில் இலக்கங்களுடன் சில எழுத்துக்களும் இருக்கிறது. பிஎப் கணக்கு எண், அதனுடைய குறியீட்டுவிபரங்களை தெரிந்துகொள்வோம். பிஎப் கணக்கு எண்ணானது எண்எழுத்தெண் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளில் வரப்போகும் மாற்றம்?….. பயணிகளுக்கு முக்கிய தகவல்….!!!!

இந்திய ரயில்வேயானது அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக புது அப்டேட்டுகள் வாயிலாக சேவையை மேம்படுத்தி வருகிறது. அதன்படி இப்போது டிக்கெட் முன் பதிவு முறையினை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய ரயில்வேயானது உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகத்தின் ஆன்லைன் பயணிகள் டிக்கெட் முன் பதிவு முறையை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு விலக்கு உள்ளிட்ட வசதியைப் பெறமுடியும். அத்துடன் உடனுக்குடன் பயணிகளின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொடூர சம்பவம்…. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் “மீது லாரி மோதி 4 பேர் பலி”….. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

லாரி மோதி 4  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் நேற்று இரவு சாலையின் நடுவில் உள்ள சாலை பிரிப்பானில்  சிலர் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிகாலை 1. 55 மணியளவில் அவ்வழியாக வந்த லாரி நிலை தடுமாறி தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் காயம் அடைந்த 2  பேரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி தொலைக்காட்சியில்…. வெறுப்பு பேச்சை பேசினால்” கடும் நடவடிக்கை”….. சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறப்பு விருந்தினர்கள் வெறுப்பு பேச்சை பேச அனுமதிக்க கூடாது என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி சேனல் தொகுப்பாளரின் பங்கு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் ஹிரிஷிகேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது. ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளரின் பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் ஆனது. மேலும் அவரது பணி சிக்கல் நிறைந்தவைகள் ஆகும். ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கு விருந்தினர்களாக வந்துள்ள நபர்கள் வெறுப்பு பேச்சை பேச […]

Categories
தேசிய செய்திகள்

50 சதவீத விமானங்கள் மட்டுமே இயக்கப்படும்….. பிரபல நிறுவனத்திற்கு அனுமதி அளித்த டிஜிசிஏ….!!!!!

50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க பிரபல நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில். அடுத்த மாதம்  29ஆம் தேதி வரை 50 சதவீத விமானங்கள் மட்டுமே இயக்க அனுமதி அளித்துள்ளது. ஏனென்றால் இந்த நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 19 -ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள்…. நொடியில் பறிபோன 4 உயிர்….. பெரும் சோகம்….!!!!

தில்லியில் சாலையில் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் உறங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருக்கிறது. தில்லியின் சீமாபுரி பகுதியிலுள்ள பிரதானசாலையின் நடுவேயுள்ள தடுப்புச்சுவர் மீது நேற்று இரவு சில பேர் உறங்கிகொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவு 1:51 மணியளவில் அவ்வழியே அதி வேகமாக சென்ற லாரி ஒன்று  மின்கம்பத்தில் மோதி, தடுப்புச்சுவர் மீது தூங்கிய 6 பேர் மீது ஏறியுள்ளது. இதனால் ஒரு இளைஞர் உட்பட 4 பேர் பலியாகினர். […]

Categories
தேசிய செய்திகள்

“கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து” பணம் போட்டவர்களின் நிலை என்ன….? ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

புனேவில் ரூபி கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மோசமான நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணம் போட்டவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு கடன் கூட வழங்க முடியாத சூழ்நிலையும் […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்டிக்குள் கட்டு கட்டாக இருந்த பணம்” ஆற்றில் மிதந்து வந்த அதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றில் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் ஒரு அட்டை பெட்டி மிதந்து வந்துள்ளது. இதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர் பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் தண்ணீரில் மிதந்து வந்த அட்டைப்பெட்டியை எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதில் 500 ரூபாய் பணம் கட்டு கட்டாக இருந்தது. இதைப் பார்த்து அந்த நபர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அட்டைப் பெட்டியில் இருந்த பணம் அனைத்துமே போலியானது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு விமானத்தில் பறக்க ஆசையா?…. 50 லட்சம் இலவச டிக்கெட்டுகள்…. ஏர் ஏசியா நிறுவனம் அதிரடி சலுகை…!!!!

ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் விமான கட்டணம் அதிகமாக உள்ளதால் அந்த ஆசை பலருக்கும் கனவாகபோகிறது. அந்த ஆசையை தற்போது நிறைவேற்றிக் கொள்ள அருமையான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் எந்த பணமும் செலவழிக்காமல் இந்த கனவை நிறைவேற்ற இயலும். உள்நாட்டு விமான நிறுவனம் ஆன ஏர் ஏசியா, சிறந்த சலுகையை வழங்கி இருக்கிறது. ஏர் ஏசியா நிறுவனம் இலவச டிக்கெட் சலுகை வாயிலாக 50 […]

Categories
தேசிய செய்திகள்

பிஎப் கணக்கில் கெஒய்சி-ஐ புதுப்பிப்பது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!!

மாத சம்பளத்தில் பிஎப் கழிக்கப்படும் நபராக நீங்கள் இருப்பின், இத்தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். பிஎப் கணக்கின் கெஒய்சி செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கி இருக்கிறது. இதன் கீழ் இபிஎப் கணக்கு வைத்திருப்போர் ஆதார்அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்களது கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். இபிஎப்ஓ, கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் சில சிறந்த அம்சங்களை வழங்கி இருக்கிறது. இதன் உதவியுடன் உங்களது இபிஎஃப் கணக்கின் கெஒய்சி-ஐ எங்கும் எந்நேரத்திலும் புதுப்பிக்கலாம். இபிஎப் […]

Categories
தேசிய செய்திகள்

94 வருஷத்துக்கு முன்பே ரயிலில் ஏசி வசதி…. வெளியான சுவாரசிய தகவல்…..!!!!!

இந்திய ரயில்வே உலகின் 4வது பெரிய ரயில் அமைப்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ரயிலில் பயணம் செய்யாதவர்களை பார்ப்பது மிகவும் அரிதாகும். இப்போது ரயில்களில் பல்வேறு வசதிகள் வரத்துவங்கியுள்ளது. இந்திய ரயில்களில் பல்வேறு வகையான ரயில் பெட்டிகள் இருக்கிறது. பொதுவகுப்பு, ஸ்லீப்பர், 3ம் வகுப்பு, 2ஆம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு. இது தவிர்த்து காலப் போக்கில் இந்திய ரயில்வேயில் பல்வேறு வகையான ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டது. அதாவது, நாட்டின் முதல் ஏசி ரயிலின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வங்கிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை…. எந்தெந்த தினங்களில் தெரியுமா….? கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வழங்குகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கருத்து கேட்கப்பட்டு அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு ஏற்ப விடுமுறை வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவில் மட்டுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் வருகிற‌ அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

EPFO திட்ட விரிவாக்கம்…. என்னென்ன பயன்கள்?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (இபிஎப்ஓ) தற்போது அதனுடைய திட்ட விரிவாக்கத்தில் கவனம்செலுத்தி வருகிறது. விரைவில் வருங்கால வைப்புநிதி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு உடல் நலம், ஓய்வூதியம், மகப்பேறு மற்றும் உடல் ஊனம் (அல்லது) இயலாமை குறித்த பலன்களை இபிஎப்ஓ அமைப்பு வழங்கக்கூடும். இபிஎப்ஓ அமைப்பானது அடிப்படை சமூகப் பாதுகாப்புத்துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. மேலும் EPFO சமூகப்பாதுகாப்புத் தளத்தின்(SPF) சரியான மேலாளராக இயலும் எனவும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!… மார்ச் 31 வரை நீட்டிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

வங்கிக்கணக்கு பாரதஸ்டேட் வங்கியிலிருந்து(SBI), தாங்கள் மூத்த குடிமகனாக இருந்தால் இச்செய்தியானது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் (ஃபிக்ஸட் டெபாசிட்) அதிகமான வருமானத்தை பாரதஸ்டேட் வங்கி வழங்குகிறது. அந்த வகையில் மூத்தகுடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்புத்திட்டத்தை எஸ்பிஐ மீண்டுமாக நீட்டித்து இருக்கிறது. நாட்டில் உள்ள பொதுத்துறைக்கு, வங்கிக்கு மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான பாரத ஸ்டேட்வங்கி, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத் திட்டமான “எஸ்பிஐ வீகேர்”ஐ மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

“வேலையை இழந்த தந்தை” வங்கியின் திடீர் நடவடிக்கை…. மாணவியின் விபரீத முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் அஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அஜிகுமார் தன்னுடைய வேலையை இழந்ததால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1.5 லட்சம் பணத்தை வங்கியில் அஜிகுமார் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“தேசிய பென்சன் திட்டம்” பணம் எடுப்பதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் தேசிய பென்சன் திட்டத்தை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான‌ பிஎஃப்ஆர்டிஏ நிர்வகிக்கிறது. இந்த திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தின் படி ஒருவர் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், பணியில் இருந்து ஓய்வு பெறும் போது தன்னுடைய பென்ஷன் தொகையில் 60 சதவீதத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்பின் மீதுமுள்ள பணத்தை ஆண்டு தொகை வாங்கி ஓய்வூதியமாக பெறலாம். இந்தப் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளை தற்போது பிஎஃப்ஆர்டிஏ திருத்தியுள்ளது. இதுவரை ஓய்வூதிய திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஓட்டுநர் உரிமத்தை இப்படி பெறலாம்?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ஓட்டுநர் உரிமம் உட்பட 58 வகையான பணிகளுக்கு இனிமேல் ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவை இல்லை என்றும் ஆன்லைன் மூலமாகவே பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப்பதிவு, வாகன பர்மிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட 58 விதமான பணிகளை பொதுமக்கள் தாங்களாகவே ஆன்லைன் வாயிலாக செய்து கொள்ளலாம். இதன் வாயிலாக வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல…. பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ரூ.2.3 லட்சம் டிப்ஸ்?…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

அமெரிக்க நாட்டில் பீட்சா நிறுவனம் ஊழியருக்கு ஒரு வாடிக்கையாளர் ரூபாய்.2.3 லட்சத்தை டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் பென்ஸில் வேனியா மாகாணத்திற்கு உட்பட்ட ஸ்க்ரான்டான் நகரில் ஒரு பீச்டா நிறுவனம் இயங்கி வருகிறது. இவற்றில் எரிக்ஸ்மித் என்பவர் சாப்பிட வந்துள்ளார். அவருக்கு மரியானா லம்பார்ட் என்ற உணவக ஊழியர் பீட்சா பரிமாறி இருக்கிறார். உணவு உட்கொண்டதை அடுத்து அவருக்கு பில் கொடுக்கப்பட்டது. அவற்றில் பீட்சாவுக்கான கட்டணத்துடன் உணவக ஊழியர் லம்பார்ட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இது தமிழகத்தில் ரொம்ப அதிகரித்து வருகிறது!…. அமித்ஷாவிடம் கம்ப்ளைன்ட் பண்ண இபிஎஸ்….!!!!

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருநாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு தில்லி வந்தாா். அவா் முன்னாள் அமைச்சா்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி. போன்றோருடன் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை […]

Categories
தேசிய செய்திகள்

டேய்! அவ என்னோட ஆளு….. தன்னுடைய காதலியுடன் ஜாலியாக சுற்றிய வாலிபர்….. ஆத்திரத்தில் முன்னாள் காதலனின் வெறிச்செயல்….!!!

பெங்களூரில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் பவன் (23) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த வாலிபர் திடீரென இளம் பெண்ணிடம் சரிவர பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம்பெண் அந்தோணி என்ற வாலிபரை 2-வதாக காதலித்துள்ளார். இந்நிலையில் இளம் பெண்ணும், அந்தோணியும் இரு சக்கர வாகனத்தில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்தனர். இதை தெரிந்து கொண்ட பவன் அவருடைய நண்பர்கள் சரத் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையிலிருந்து உணவு விநியோகம்…. மாவட்ட அதிகாரி பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசம் ஷஹாரன்பூரில் கபடி வீரா்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இதற்கிடையில் சமூகவலைதளங்களில் வெளியாகிய வீடியோவில், அம்பேத்கா் விளையாட்டு அரங்கிலுள்ள கழிவறையில் சாப்பாடு, பூரி வைக்கப்பட்டுள்ளதும், அதனை கபடி வீராங்கனைகள் எடுத்துச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இவ்வீடியோவை பா.ஜ.க பிலிபிட் எம்.பி. வருண் காந்தி பகிா்ந்து “இந்திய விளையாட்டுத் துறையிலிருந்து அரசியல்வாதிகளையும் அவா்களின் நிா்வாகிகளையும் நீக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தில்லி […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! கடவுளே…. சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்…. ரூ. 20 முதல் 30-க்கு டுவிட்ரில் விற்பனை…. வெளியான பகீர் தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதாக வதந்தி பரவியது. இதனால் கடந்த 17-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 1 மாணவி தன்னுடைய ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. அதன் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில்…. “ஒவ்வொரு மணி நேரமும் 1 விவசாயி தற்கொலை” தினசரி 30 பேர்…. பகீர் கிளப்பிய காங்கிரஸ்….!!!!

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் பாஜக கட்சியின் கொள்கைகள் மட்டுமே என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 17-ஆம் தேதி புனேவைச் சேர்ந்த ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவர் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறியதாவது, தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

மணமகன் தேவை…. “ப்ளீஸ்” சாப்ட்வேர் இன்ஜினியர்கள் போன் பண்ணாதீங்க…. இணையத்தில் வைரலாகும் விளம்பரம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் மணமகன் மற்றும் மணமகள் தேடும் படலம் பல்வேறு விதி முறைகளைக் கடந்து மேட்ரிமோனி, இணையதளம், செய்தித்தாள்கள் என விரிவடைந்துள்ளது. இந்த தேடலின் போது சிலர் வித்தியாசமான முறையில் மணமகன், மணமகள் தேவை என விளம்பரம் செய்கின்றனர். அந்த வகையில் மணமகன் தேவை என ஒரு பெண் வீட்டார் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தில் மணமகள் 24 வயது நிரம்பிய எம்பிஏ பட்டதாரி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு செல்வாக்கு நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஐஏஎஸ், […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!…. சியாச்சின் ராணுவத்துக்கு இணைப்பு கொடுத்த பிபிஎன்எல்….. வெளியான தகவல்கள்….!!!!

 ராணுவத்திற்கு இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம்  இணைப்பு கொடுத்துள்ளது. உலகின் மிகவும் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை விளங்குகிறது. இங்கு இணைய சேவையை  ராணுவம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ராணுவம்  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் உலகின் மிகவும் உயரமான போர்க்களமாக சியாச்சின் பனிமலை விளங்குகிறது. இங்கு 19, 061 அடி உயரத்தில் இணைய  சேவை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிபிஎன்எல் பாரத் பிரான்ட் பேண்ட்  நெட்வொர்க் லிமிடெட் சியாச்சினின் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் ரயில் நிலையம் இல்லாத 132 மாவட்டங்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை ரயில்வே வரைபடத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான ரயில் நிலையங்கள் உள்ளது. ஆனால் சில மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் நிலையங்கள் இல்லை. இவற்றை  கண்டறிய இந்திய ரயில்வே பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜ்னா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் நிதி ஆயோக்  பரிந்துரைத்தது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 132 மாவட்டங்களின் தலைநகரங்களில்  ரயில் நிலையங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ரானேவுக்கு சொந்தமான பங்களா…. ” ரூ. 10 லட்சம் அபராதத்துடன் இடிக்க உத்தரவு” மும்பை கோர்ட் அதிரடி….!!!!

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக நாராயணன் ரானே இருக்கிறார். இவர் மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் ஒரு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களா கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவை ஒழுங்கு படுத்த கோரி மாநகராட்சியிடம் மத்திய அமைச்சரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மாநகராட்சி நிர்வாகம் மறுத்த நிலையில், 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க!… ஜம்மு காஷ்மீரில் 32 வருஷத்துக்கு பின் மீண்டும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 32 வருடங்களுக்கு பின் திரையரங்கு திறக்கப்பட இருக்கிறது. இவற்றில் முதல் திரைப்படமாக பொன்னியின் செல்வன், விக்ரம் வேதா திரையிடப்பட உள்ளது. ஸ்ரீநகரின் சிவபோரா எனும் பகுதியில் கட்டப்பட்டுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கை ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இன்று திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாக திரையரங்கின் உரிமையாளர் விஜய் தார், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், திரையரங்கு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்துவிட்டது. இன்று துணைநிலை ஆளுநர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

குஜராத் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவோம் என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வருடம் இறுதியில் குஜராத் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக-வை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் நேரடியாக போட்டியிட உள்ளது. தில்லியை அடுத்து பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் கால் பதிக்கும் முனைப்பில் குஜராத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள்…. மர்ம நபர்களின் கைவரிசை…. பரபரப்பு….!!!!!

ஹரியாணாவில் பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹரியாணா மாநிலம் சகாரன்பூர் – பஞ்ச்குலா தேசிய நெடுஞ்சாலை 344-ல் யமுனா நகர் அருகில்  கட்டப்பட்டுள்ள பாலத்தை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது பாலத்திலிருந்த 4,000 நட்டு, போல்டுகள் காணாமல் போனதை கண்டு பொறியாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். எனினும் இந்த திருட்டு சம்பவம் பற்றி நெடுஞ்சாலைத்துறை சார்பாக இதுவரையிலும் எந்த புகாரும் காவல்துறையில் அளிக்கவில்லை என சதார் காவல்துறை அதிகாரி தினேஷ் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார் மக்களே….! ஒரே ஒரு கிளிக் தான்…. மொத்த பணமும் காலி…. ஷாக் நியூஸ்….!!!!

தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு விதமான நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததில் இருந்து மோசடிகளும் அதிகரித்துவிட்டது. நம்முடைய செல்போன் நம்பருக்கு ஏதாவது ஒரு குறுந்தகவலை அனுப்பி அதன் மூலம் நெடிப்பொழுதில் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகின்றனர். இந்த ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக வங்கிகளும் காவல்துறையினரும் பொது மக்களுக்கு பல்வேறு விதமான எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடுபவர்களே உஷார்!…. போலி நேர்முக தேர்வுகள்…. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

வேலை வழங்குவதாக சொல்லி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக சிலர் பணம் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்குரிய எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை எனவும் இதனால் வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது, சில மர்மநபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு போறாங்களா?…. கடும் கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சிகள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையிலிருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ செப்டம்பர் 16ம் தேதி சஹாரன்பூரில் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின்போது சில வீரர்களால் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கழிவறை போன்ற தோற்றத்திலுள்ள  அறையில் இருந்து பல பாத்திரங்களிலிருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்லப்படுவதை வீடியோக்களில் காட்டப்படுகிறது. அந்த 1 நிமிட வீடியோவில் பிரேமில் சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்கள் காட்டப்படுகிறது. அதன் வாயிலுக்கு அருகிலுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

FLIPKART நிறுவனத்தின் Big Billion Days Sale….. ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த ஆஃபர்கள்‌….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் நெருங்குவதால் பல்வேறு பொருட்களுக்கு ஆஃபர்கள் போடப்படுகிறது. அந்த வகையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்லிப்கார்ட் நிறுவனமும் பிக் பில்லியன் டேஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கு ஆபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ஸ்மார்ட் போன்களுக்கு அதிரடி ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதில் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளும் இணைந்தும் 10% தள்ளுபடி வழங்குகிறது. இந்நிலையில் 20000 ரூபாயில் கிடைக்கக்கூடிய சில ஸ்மார்ட் ஃபோன்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி xiaomi […]

Categories
தேசிய செய்திகள்

“அஞ்சலக மாத வருமான திட்டம்”…. என்னென்ன நன்மைகள்?…. இதோ முழு விபரம்….!!!!

பாதுகாப்பான மற்றும் நிலையான லாபத்தை பெற விரும்புவோருக்கு, அஞ்சலகத்திட்டம் மிகவும் சிறந்தது ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடுசெய்தால் மாதந்தோறும் நிலைஆன ஒரு வருமானத்தை பெறலாம். இத்திட்டத்தை பெரியவர்கள் மட்டுமின்றி 10 (அல்லது) 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில் திறக்கலாம் . உங்களது குழந்தைகளின் பெயரில் இந்த அஞ்சல் அலுவலக மாத வருமானத்திட்டம் என்னும் சிறப்புக் கணக்கை துவங்கினால், அவருடைய பள்ளிக்கட்டணத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இத்திட்டம் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். இக்கணக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட் கார்டு மூலம் யுபிஐ கட்டணம்?…. இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பண மதிப்பாய்வுக் கொள்கையின் முடிவுகளை வெளியிட்டதுடன், ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாகவும் அறிவித்து இருக்கிறார். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையில், ரிசர்வ் வங்கி கணித்துள்ள மதிப்பீட்டின் அடிப்படையில், இந்த நிதி ஆண்டில் பணவீக்கம் 6.7 சதவீதம் ஆக இருக்கும். இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதம் ஆகவும், 2ம் காலாண்டில் 7.4 சதவீதம் ஆகவும், 3ம் காலாண்டில் 6.2 சதவீதம் ஆகவும், 4வது காலாண்டில் 5.8 […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! அதிக குடிபோதை…. விமானத்தில் தள்ளாடிய முதல்வர்….. எதிர்க்கட்சி பகீர் குற்றச்சாட்டு…. நடந்தது என்ன…?

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் சட்டமன்ற பேரவையில் 117 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 92 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களும், சிரோமணி அகாலி தளத்துக்கு 3 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏவும், ஒரு சுயேட்சை எம்எல்ஏவும் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் பகவந்த்மான் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மயானத்திற்கு வரக்கூடாது?… தலித் அமைப்பினருக்கு எதிர்ப்பு…. சாலையோரத்தில் மூதாட்டி உடலை அடக்கம் செய்த அவலம்….!!!!

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் பிஜ்வாரா கிராமத்தில் 100க்கும் அதிகமான தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலுள்ள மயானத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அங்கு அடக்கம் செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஹனுமக்கா(75) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துசென்றனர். அப்போது மற்றொரு பிரிவினர் ஹனுமக்காவின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

“சதுப்பு நிலங்களை மீட்கும் விவகாரம்”…. தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை சோழிங்கநல்லூர் அருகில் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எச்.சி.சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநிலம் முழுதும் ஆக்கிரமிப்பிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகள், சதுப்பு நிலங்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சதுப்பு நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை கருணை இன்றி அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளிலுள்ள கட்டிடங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மின்சார […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை போதனைகள்?…. பள்ளிக்கல்வித்துறை மந்திரி வெளியிட்ட தகவல்….!!!!

கர்நாடக மாநில மேல் சபையில் பா.ஜனதா உறுப்பினர் பிரானேஷ் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதில் அளித்தார்.  அதாவது “அம்மாநிலத்தில் இப்போதுள்ள பள்ளிப் பாடத்திட்டத்தின் கீழ் பகவத் கீதை போதனைகளானது சேர்க்கப்படாது. அதுபோன்ற எண்ணம் அரசுக்கு கிடையாது. எனினும் வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த பாடத் திட்டத்தில் தார்மீக பாடத்தை சேர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். அத்துடன் அப்பாடத்தில் பகவத் கீதையின் போதனைகள் இணைத்து குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்படும். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

அட டேய் சூப்பர்!!…. நிதி ஆயோக் முறையில் புதிய நிறுவனம்…. துணை முதல் மந்திரி தகவல்….!!!!

துணை முதல் மந்திரி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த 7  ஆண்டுகளுக்கு முன்பு  நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு வளர்ச்சி கொள்கையை  பரிந்துரை செய்கிறது. மேலும் மாநிலங்களில் செயல்பாடுகள் பற்றி  அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் துணை-முதல் மந்திரி தேவேந்திர பட்னாவீஸ்   நேற்று செய்தியாளர்களை சந்தித்து தேசியதாவது. இந்த அமைப்பின்  அடுத்த பரிணாமமாக மராட்டியத்தில் இது போன்ற  ஒரு அமைப்பு தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்  மூலம் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் எடுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணைய விரும்புகிறீர்களா?…. நான் என் காரை கடனாக தருகிறேன்….. காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆவேசம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவரான  கமல்நாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது என நினைக்காதீர்கள். மேலும் சிலர் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விரும்புகிறார்கள். அவர்கள் தாராளமாக செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க மாட்டார்கள். அப்படி செல்பவர்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றால் அவர்கள் பாஜகவில் சென்று இணைய நானே எனது காரை கடனாக கொடுக்கிறேன். இந்நிலையில் […]

Categories

Tech |