Categories
தேசிய செய்திகள்

விடுதியில் இளம்பெண் கொலை…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…. போலீஸ் நடவடிக்கை….!!!!

உத்தரகாண்டில் பாஜக பிரமுகரும், முன்னாள் மந்திரிம் ஆன வினோத்ஆர்யா என்பவரின் மகன் புல்கிட் ஆர்யா ஆவார். இவருக்கு பவ்ரி ஹர்க்வல் மாவட்டம் ரிஷிகேஷ் அருகில் வனந்த்ரா எனும் பெயரில் சொகுசு விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். சென்ற 18ஆம் தேதி பணிமுடிந்தும் அவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அங்கிதாவின் தந்தை, சொகுசு விடுதியின் உரிமையாளரான புல்கிட் ஆர்யா மீது சந்தேகத்தின் படி காவல் நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளதா….? மத்திய நிதி மந்திரி விளக்கம்…!!!!

இந்தியாவின் ரூபாய் மதிப்பானது வெளிநாட்டு கரன்சியுடன் ஒப்பிடுகையில் நன்றாக இருப்பதாக மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார். அதாவது ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 80 ரூபாயை தாண்டியுள்ளது‌. இது வரலாறு காணாத வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. ஒரு டாலருக்கு 39 காசுகள் சரிந்து முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக இருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் பெஞ்ச் மார்க் வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இதனால்தான் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்த இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர போகுதா….? ரிசர்வ் வங்கியின் அதிரடி முடிவு….!!!!

இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்து செல்வதால், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் உயர்ந்ததால், 4.40% வட்டி விகிதம் அதிகரித்தது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 0.50% அதிகரித்ததால், […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் போட்டி…. ராஜஸ்தான் முதல்வராகும் சச்சின் பைலட்…..? இன்று ஆலோசனை நடப்பதாக தகவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்து கொள்ளலாம். இந்த தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரர் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சோனியா காந்தியின் ஆதரவுடன் காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோக்கள் பார்த்தவர்கள் மீது ஆக்சன்…. நாடு முழுதும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!!

இந்தியாவில் சிறுமிகளிடம் அத்துமீறும் வீடியோக்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்படுவதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 59 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள சென்னை, திண்டுக்கல் மற்றும் கடலூர் மாவட்டத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் ரூ.550 பெட்ரோலுக்கு ரூ.55,000 செலுத்தப்பட்டதா?…. அதிர்ச்சியடைந்த கஸ்டமர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போட சென்றவர், Google pay வாயிலாக 550 ரூபாய் கட்ட வேண்டியதற்கு பதில் பெட்ரோல் பங்க் ஊழியரின் கவனக்குறைவால் 55 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருக்கும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பணத்தை இழந்த நபர் முதலில் தன் ஸ்கூட்டருக்கு தானேவில் உள்ள ஷெல் பெட்ரோல் பங்கில் டேங்க் ஃபுல் செய்துள்ளார். அதற்குரிய கட்டணமாக 550 ரூபாய் எனக் கூறியதும், அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கடந்த ஓராண்டில்…. வேலையின்மை விகிதம் குறித்த முழு விபரம் இதோ….!!!!

நாட்டில் வருடந்தோறும் லட்சக் கணக்கான இளைஞா்கள் பட்டப் டிப்பை முடித்து கல்லூரியை விட்டு வெளியேறுகின்றனா். ஆனால் அதற்கேற்றவாறு பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. புது முதலீடுகளை ஈா்த்து அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது. நாட்டில் நிலவும் வேலை இன்மை விகிதம் பற்றி இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் (அனைத்துத் தரவுகளும் சதவீதத்தில்) பற்றி காண்போம். சென்ற ஓராண்டில் வேலையின்மை விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ என்னை விடுங்க…. சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய டாக்டர் தம்பதி…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

சிறுமிக்கு  சூடு வைத்து  இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் முகமது கம்புரான்-ரகுமான் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இந்நிலையில் இவர்கள் பந்தீர் காவு என்ற இடத்தில் கிளீனிக் ஒன்றை  வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் வீட்டு வேலை செய்வதற்காக 12 வயது  சிறுமியை ஒருவரை  மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் இவர்கள் அந்த சிறுமியை அடித்து, உதைத்து வேலை வாங்கி வருகின்றனர். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

டபுளாக அதிகரிக்கும் இந்திய பால் சந்தையின் அளவு?…. வெளியான தகவல்…..!!!!

இந்திய பால் சந்தையின் அளவு இன்னும் 5 வருடங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத் தலைவா் மீனேஷ் ஷா தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக உத்தரபிரேதசத்தின் கிரேட்டா் நொய்டாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவா் பேசியதாவது ” கடந்த 2021ம் ஆண்டில் இந்திய பால் சந்தையின் அளவு ரூபாய்.13 லட்சம் கோடியாக இருந்தது. இது வருகிற 2027-ஆம் வருடத்திற்குள் ரூபாய்.30 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா: இனி மோசமான பாதிப்பு இருக்காது…. கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள்….!!!!

கொரோனாவால் இனிமேல் மோசமான பாதிப்புகள் இருக்காது என பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதேசமயம் 2 வருடங்களுக்கும்  மேலாக உலகின் ஒவ்வொரு மூலையையும், வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்த ஒரு பெருந் தொற்றுநோய் கொரோனாவாகத்தான் இருக்க முடியும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். பேரிடா் முடிவுக்கு வந்த விட்டது என்ற போதிலும், கொரோனா இங்கே தொடா்ந்து இருந்துகொண்டு தான் இருக்கும். இந்தியா உட்பட உலகின்  பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையானது குறையத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்…. உங்க மகளுக்கு ரூ. 15,000 வேணுமா….? அப்ப உடனே இதுல ஜாயின் பண்ணுங்க….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது கன்யா சுமங்கலா யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெற்றுள்ளதாகவும், ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது எனவும் முதல்வர் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில் 5வது மண்டபம் கட்டப்படும் என அரங்காவலர் குழு தலைவர் அறிவித்து இருக்கிறார். கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வருகையானது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களின்  நலனை கருத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வீடுதேடி வரும் பாஸ்போர்ட்…. அப்ளை செய்வது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!!

வெளிநாடுகளுக்கு போக முக்கியமான ஆவணமாகவுள்ள பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பிக்கும் செயல் முறை இப்போது எளிமையான ஒன்றாக மாறி விட்டது. விண்ணப்பித்த வெறும் 7 நாட்களில் பாஸ்போர்ட் உங்களது இல்லம்தேடி வரும் அடிப்படையில் பாஸ்போர்ட் விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆன்லைன் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு, முதலாவதாக நீங்கள் https://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். இத்தளத்தில் உங்களுக்கு பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். 7 நாட்களில் பாஸ்போர்ட்டை பெற விரும்பினால் நீங்கள் இங்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பெண்ணின் ஆடையை கிழித்து… அசிங்கப்படுத்திய கேளிக்கை விடுதி பாதுகாவலர்கள்…. பெரும் அதிர்ச்சி….!!!!

டெல்லியின் தெற்கு எக்ஸ்டன்ஷன் பார்ட்-1 பகுதியில் கோட் என்ற தனியார் கேளிக்கை விடுதி இருக்கிறது. இந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு சென்ற 18ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் பெண் தன் நண்பர்களுடன் சென்று இருக்கிறார். இந்நிலையில் அந்த கேளிக்கை விடுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாவலர்கள் அப்பெண்ணையும், அவரது நண்பர்களையும் விடுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பாட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பெண்ணையும் அவரது நண்பர்களையும் கேளிக்கை விடுதி பாதுகாவலர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்….. அதிரடியாக ஆய்வு செய்த தேசிய புலனாய்வு முகமை….!!!!

தேசிய புலனாய்வு முகமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிறுவனம் வெளிநாடுகளில் வசிக்கும் உறுப்பினர்களிடமிருந்து இந்தியாவில் அவர்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கணக்குகளில் நிதி பெற்று அதனை தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு மடை மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு  சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை கடந்த வியாழக்கிழமை அதிரடியாக சோதனை செய்தது. அப்போது 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. மோசடி விளம்பரங்கள் மூலம் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்…. எச்சரிக்கை விடுத்த மியான்மர் வெளியுறவு அமைச்சகம்….!!!!!

மியான்மர் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊடக விளம்பரங்கள் மூலம் போலி வேலை மோசடிகள் நடைபெறுகிறது. இந்த மோசடிகள் இந்திய வாலிபர்களை குறி வைத்து நடைபெறுகிறது. மேலும் தனியார் ஆட்சி சிறப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆசிரியரை ஓட ஓட விரட்டி துப்பாக்கியால் சுட்ட மாணவன்” எதற்காக தெரியுமா….? பகீர் பின்னணி இதோ….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் படிக்கும் மாணவன் சரிவர படிக்காததால் அவரை ஆசிரியர் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவன் ஆசிரியரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இந்நிலையில் மாணவருக்கு திடீரென ஒரு நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்தோ கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆசிரியர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த மாணவன் ஆசிரியரை பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அதன்பின் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக சுடத் தொடங்கினான். இதைப்பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்?…. விரைவில் வெளியாகபோகும் உத்தரவு….!!!!

புதுவை காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். காரில் பயணிப்போர் சீட்பெலட் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையிலுள்ள அனைத்து பிரிவினருக்கும் தலைமையக கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள உத்தரவில் “போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள், ஊர்க் காவல் படையினர் அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். அதுமட்டுமின்றி இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் அணியவேண்டும். 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட்பெல்ட் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை எப்படி இணைக்கலாம்….? பல வழிமுறைகள் இதோ…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் ஒரு தனி மனிதரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கும். இந்த ஆதார் அட்டையானது நாட்டில் உள்ள பல்வேறு பயன்பாடுகளுக்கு முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதன் காரணமாக ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்களோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுத்த இளம் பெண் கொலை” பாஜக மூத்த தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்….. முதல்வர் அதிரடி….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு ‌ திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதி இல்லாமல் பறக்கும் ட்ரோன்களை பிடிக்க…. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு….!!!!

கேரளா மாநிலம் கொச்சியில் சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கென காவல்துறை ஏற்பாடு செய்திருந்த 15 வது கோகோன் மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். இம்மாநாட்டில் சுமார் 1200 உள் நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லூநர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அனுமதி இன்றி பறக்கும் ஆளில்லா விமானங்களைப் பிடிக்க கேரள காவல்துறை ஈகிள் ஐ எனும் பெயரில் ட்ரோன் டிடெக்டர் வாகனத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவிலேயே மாநில காவல் துறை ஆளில்லா விமானத்தை கைப்பற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வரின் நாற்காலியில் அமர்ந்த எம்பி” தந்தையின் இடத்தில் மகன் அமர்ந்த புகைப்படம் வைரல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

மராட்டிய மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியில் அவருடைய மகன் எம்.பி ஸ்ரீகாந்த் ஷிண்டே உட்கார்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டோவில் எம்பி ஸ்ரீகாந்த் உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் பின்னால் மராட்டிய மாநில முதல்வர் என்ற போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் சூப்பர் முதல்வராக மாறி விட்டீர்களா? இந்த செயலுக்காக நீங்கள் மக்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“உடலுறவுக்கு மறுப்பு” இளம்பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய கொடூரம்…. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ரிசார்ட் இடிப்பு….!!!!

உத்திரகாண்ட்  மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

“பம்பர் லாட்டரியில் 25 கோடி பரிசு பெற்ற ஆட்டோ ஓட்டுனர்” நிம்மதியும், மகிழ்ச்சியும் பறிபோய் விட்டதாக வேதனை‌….!!!!

கேரள மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநரான அனூப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏராளமான கடன் இருந்ததால் சமையல் வேலைக்கு மலேசியாவுக்கு செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அதோடு வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் தொகைக்காகவும் விண்ணப்பித்திருந்தார். இந்த கடன் தொகையை வழங்குவதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், ஓணம் பம்பர் லாட்டரியில் அவருக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்தது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அனூப் தன்னுடைய மனைவியுடன் லாட்டரி ஏஜென்சி இருக்கும் இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பழைய ஓய்வூதியத்திட்டம் என்பது சில காலம் வரை நாடெங்கிலும் நடைமுறையில் இருந்த ஒன்று தான். இதற்கிடையில் மத்திய அரசு புது ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தபின், ஏறக்குறைய அனைத்து மாநிலங்களுமே பழைய ஓய்வூதியத்திட்டத்தை கைவிட்டுவிட்டது. அதேநேரம் தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் குஜராத்தில் பழைய ஓய்வூதியம் திட்டத்தினை நடைமுறைபடுத்த வேண்டுமென அரசுஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையில் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு…. மீண்டும் ஒரு வாய்ப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ-யில் மூத்தகுடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI “WECARE”. இத்திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா  காரணமாக சிறப்பு FD திட்டமான  இது பலமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் வங்கி சார்பாக இந்த ஸ்பெஷல் பிக்சட்டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. SBI Wecare டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றில் 30 bps […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ஸ்மார்ட் மூட்டுகள்…. இஸ்ரோ புது அறிமுகம்….!!!!

முன்பாக ஒரு கால் இல்லாதவர்கள் எடை அதிகமான செயற்கைக்கால் பொருத்தி நடக்கவேண்டி இருந்தது. அதன் அதீத எடை நடப்பவர்க்கு சிரமத்தை கொடுத்தது. அதற்கு நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம்  இஸ்ரோவில் பணிபுரிந்தபோது  ராக்கெட் தயாரிக்கும் மெல்லிய வலுவான இலகுரக புரோஸ்டெடிக்ஸ் பயன்படுத்தி இலகுரக செயற்கைக் கால்களை உருவாக்கினார். இன்றுவரை அந்த கால்கள் தான் பல பேருக்கும் பெரிய துணைவனாக நின்று அந்த மக்களையும் நிற்கவைக்கிறது. தற்போது அதன் வளர்ச்சியாக நுண்செயலி பயன்படுத்தும் செயற்கை கால்களை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகள் இறப்பு விகிதத்தில் சாதனை படைத்த இந்தியா…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

இந்திய மாதிரிபதிவு அமைப்பு குழந்தைகள் இறப்பு விகிதம் பற்றி புள்ளிவிவர அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையை படைத்து இருக்கிறது. 2030ம் வருடத்திற்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, சென்ற 2014ம் வருடம் முதல் குழந்தைகள் இறப்புவிகிதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது. இந்திய மாதிரிபதிவு 2020-ன் படி, குழந்தை இறப்பு விகிதம் 2019-ல் 30 […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சுவர் இடிந்து விழுந்து “வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் பலி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சுவர் இடிந்து விழுந்து வீட்டின் உரிமையாளர் மற்றும் நாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை  பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலிகர் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கன மழை பெய்ததால் நகரின் தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த மாவட்ட ஆட்சியர் வீர் சிங் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. தன்னுடன் உடலுறவில் ஈடுபட்ட சிறுவனை கொலை செய்த மேக்கப் மேன்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

கை மற்றும் கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்த 15 வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில் நேற்று வாய் மற்றும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுவனின் உடல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த  சிறுவனின் சடலத்தை  கைப்பற்றினர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. ஏ.டி.எம். எந்திரத்தை கையோடு பெயர்த்து சென்ற மர்ம கும்பல்…. எங்கு தெரியுமா?….!!!!

ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்துக்கொண்டு சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்சவுன்ப் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை காணவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அரசுக்கு ஏற்பட்ட 22 ஆயிரம் கோடி இழப்பு…. செவி சாய்க்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட ஆ.ராசா…. சரமாரியாக கேள்வி எழுப்பிய வழக்கறிஞர்….!!!!!

அலைக்கற்றை முறைகேடு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய தொலைதொடர்பு மந்திரி ஆ. ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரை கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 21- ஆம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 2018- ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி…. ஒரு நாள் காணிக்கை எவ்வளவு தெரியுமா?…. கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்….!!!!

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக  திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற செவ்வாய் கிழமை  முதல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை கோலாகரமாக பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதற்காக வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் ஜொலிக்கிறது. மேலும் இந்த பிரமோற்சவ விழாவில் பல்வேறு மாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

இறந்த பிறகும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் நாயக். இவருக்கு லட்சுமிபாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ரக்‌ஷிதா(16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூருவிலுள்ள பசவனஹள்ளி அரசு பி.யூ. கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் சென்ற 18-ஆம் தேதி ரக்‌ஷிதா கல்லூரிக்கு போக அங்குவந்த பேருந்தில் ஏற முயன்றார். எனினும் அதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கிவிட்டார். இதன் காரணமாக கால் தவறி பேருந்திலிருந்து தவறிவிழுந்த அவருக்கு, தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட்ஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

வாட்ஸ்அப் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான செயலி ஆகும். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமின்றி KaiOS அம்சம் உடைய சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. புது அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்போது உலகில் அதிகமக்களால் பயன்படுத்தப்படும் செயலியில் வாட்ஸ்அப் முக்கிய இடத்தில் இருக்கிறது. பல கோடிக் கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் அனைத்தும் அதன் பயனாளர்கள் தங்களது கணக்குகளில் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. ரூ.5 லட்சம் வரையிலான பலன்கள்…. மிக முக்கிய தகவல்….!!!!

மத்திய -மாநில அரசுகள் தங்கள் அரசின் நிதி ஒதுக்கீட்டின் படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை அளித்து வருகிறது. இதன் காரணமாக சாதாரண மற்றும் ஏழை-எளிய மக்கள் சிறந்த மருத்துவ வசதிகளை பெறுகின்றனர். அரசு ஊழியர்களின் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். இதேபோன்று தற்போது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை ஊழியர் வருங்கால வைப்புநிதி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கல்வீச்சு, குண்டுவீச்சு…. கேஎஸ்ஆர்டிசி டிரைவர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!!

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. பல்வேறு இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு, வயநாடு, திருவனந்தபுரம், ஆலப்புழா, பந்தளம், கொல்லம், திருச்சூர், கண்ணூர் போன்ற இடங்களில் வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டது. கோழிக்கோடு மாவட்டத்தில் 3 இடங்களில் கல்வீச்சு நடைபெற்றது. 2 இடங்களில் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டது. பெங்களூரு நோக்கிச் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் பதவி…. விரைவில் நான் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன்…. பரபரப்பு தகவல்….!!!!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளேன் என ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் தெரிவித்து இருக்கிறார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறேன். எதிர்க் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைபாடு. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி போட்டியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் நாளை துவங்குகிறது. 22 வருடங்களுக்கு பின் தலைவர் பதவிக்கு முதன் முறையாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பாவின் மகள் பெயரை பயன்படுத்தி…. ரூ.40 லட்சம் மோசடி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

பெங்களூரு நகரில் வசித்து வரும் கோபால கிருஷ்ணா அரசு ஒப்பந்ததாரர் ஆவார். அரசு பணிகளை எடுத்து செய்ததற்காக கோபால கிருஷ்ணாவுக்கு ரூபாய்.209 கோடி பில் கொடுக்கப்படாமல் பாக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கோபாலகி ருஷ்ணாவுக்கு அவரது நண்பர் ராஜ்குமார் வாயிலாக காமத் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது “தனக்கு முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகள் அருணாதேவியுடன் பழக்கம் இருக்கிறது. அவர் வாயிலாக ரூபாய்.209 கோடியை பெற்று கொடுப்பதாகவும், இதற்காக ரூபாய்.25 கோடி கொடுக்க வேண்டும்” எனவும் காமத் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக ரூ.340 கோடி…. காங்கிரஸ் ரூ.194 கோடி…. இதற்காக செலவு பண்ணிருக்காங்க…. வெளியான தகவல்….!!!!

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் போன்ற 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்தல் பிரசாரத்துக்கு செலவழித்த தொகை பற்றிய அறிக்கையை பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி உத்தரபிரதேசத்தில் ரூபாய்.221 கோடி, உத்தரகாண்டில் ரூபாய்.43 கோடியே 67 லட்சம், பஞ்சாப் மாநிலத்தில் ரூபாய்.36 கோடி, கோவா மாநிலத்தில் ரூபாய்.19 கோடி, மணிப்பூரில் ரூபாய்.23 கோடி என மொத்தம் ரூ.340 கோடி செலவழித்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணையதளத்தில் செல்போன் முதல் வீட்டுஉபயோக பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமேசான் தளத்தில் இருந்த பிரஷர் குக்கர் ஒன்றை 2265 வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர். அப்போது தான் இந்த பிரஷர் குக்கர் தரமற்றது எனவும் அதில் இந்தியத் தரச்சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதன்பின் அமேசான் தளத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் பாதுகாப்பு விதியை அமேசான்நிறுவனம் கடைபிடிக்கவில்லை எனக்கூறி […]

Categories
தேசிய செய்திகள்

“கைகோர்த்து நடத்தல், ஜாலியான உரையாடல், தடபுடலான விருந்து” ராகுல் காந்தியை வியக்க வைத்த கேரள மக்கள்….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை 3500 கிலோமீட்டர் தூரத்தை 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக கடப்பதற்கு திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மத்தியில் 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகி விட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கட்சியை விட்டு வெளியேறி மாற்று கட்சிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“யூடியூப் சேனல்கள்” மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…!!!

சமூக வலைதளமான youtube-ல் பகிரப்படும் தவறான செய்திகள் மூலம் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட youtube சேனல்களை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த youtube சேனல்களை முடக்கினாலும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தவறான செய்திகளை பரப்பும் youtube சேனல்கள் முடக்கப்படுவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தலையை கண்டுபிடிக்கும் முன் கையை வைத்து அடையாளம் கண்டுபிடித்தோம்”… 12 துண்டுகளாக வெட்டி…. கோவையை உலுக்கிய கொலை சம்பவம்…!!!!!

வாலிபரை  கொலை செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் காவல் நிலையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி குப்பைத் தொட்டியில் 2  துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் ஒருவரின் இடது கை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர் ஒருவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த   கைகளை கைப்பற்றினர்.  இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நடைபெறும் நான்கு வழி சாலை பணிகள்…. ஆக்கிரமிப்புகளை அகற்றாத பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்….!!!!

சாலையின் இருபுறங்களும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சென்னை மற்றும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை  இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. மேலும் இந்த நெரிசலால் விபத்துகளும் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் இந்த சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டனர். அதேபோல் ஸ்ரீ […]

Categories
தேசிய செய்திகள்

பணியாளர் மனநலனை கருதி 11 நாட்கள்…. இ-வர்த்தக நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலமுடன் இருப்பது, அவர்களுக்கு மட்டுமின்றி உடன் பணிபுரிவோருக்கும் பயன் விளைவிப்பதுடன், நிறுவனத்திற்கும் லாபம் ஏற்படுத்தும் எனும் நோக்கில் ஒருசில நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊக்கதொகை, பரிசு ஆகியவற்றை வழங்குதல், சுற்றுலா செல்ல வழிவகை செய்தல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும். இந்த நிலையில் மின்னணு வர்த்தக தளங்களில் ஒன்றான மீஷோ என்ற நிறுவனம் தன் பணியாளர்களின் மன நலன் சார்ந்த விசயங்களை மனதில் கொண்டு நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! சிறுமியை சீரழித்து நிர்வாணமாக நடக்க வைத்த கொடூரம்…. வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் பகுதியில் 15 வயது சிறுமியை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியின் ஆடைகளை களைந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து சென்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் ரத்த வெள்ளத்தில் சிறுமி நிர்வாணமாக சாலையில் நடந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரோட்டில் மாணவர்கள் இடையே திடீர் மோதல்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!

உத்தரபிரதேசத்தில் காஜியாபாத் நகருக்கு உட்பட்ட மசூரி போலீஸ் நிலையத்தின் கீழ் வரும் கல்லூரி ஒன்றில் பயின்றுவரும் மாணவர்கள் இருகுழுக்களாக தங்களுக்குள் மோதி கொண்டனர். அவர்கள் சாலையின் நடுவே திடீரென்று ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும்போது, கார் ஒன்று விரைவாக வந்து மாணவர்கள் மீது மோதி நிற்கிறது. எனினும் சண்டை தொடர்ந்துள்ளது. கார் மோதிய நபர் எழுந்ததும், அவரை சிலர் தாக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாணவர்கள் இதை பார்த்து அந்த பகுதியிலிருந்து அலறி […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷாரா இருங்க…. சீட் பெல்ட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை…. நெடுஞ்சாலைத்துறை மந்திரி எச்சரிக்கை….!!!!

இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவின் தொழிலதிபரான சைரஸ் மிஸ்திரி நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் . இதனால் இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. அதில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டிப்பாக பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக வைக்க  வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிகள் வெளியில் மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும்…. ஜிம்பர் மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு…. வெளியான தகவல்….!!!!

பிரபல மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் உள்ள கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிம்பர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்  நமது மருத்துவமனையில் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே நம்மிடம் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டுமே நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். இல்லாத அத்தியாவசிய மருந்துகளை நோயாளிகள் வெளியில் பணம் […]

Categories

Tech |