Categories
தேசிய செய்திகள்

இனி கட்டாயமில்லை!…. பிஎச்டி மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பிஎச்டி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக மானிய குழு முடிவு செய்து இருக்கிறது. ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் சமர்ப்பிப்பதன் மூலம் பின் நாட்களில் காப்புரிமை பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச ஆய்விதழ்ல்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதில்லை என்று யூஜிசி கண்டறிந்து இருக்கிறது. இதன் காரணமாக இந்த நடைமுறையை […]

Categories
தேசிய செய்திகள்

நீ கருப்பா இருக்க!… கடுப்பான மனைவி…. கணவருக்கு நேர்ந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!

சத்தீஷ்கரின் துர்க் மாவட்டத்தில் அம்லேஷ்வர் கிராமத்தில் ஆனந்த் சோன்வானி (40) வசித்து வந்தார். இவருக்கு சங்கீதா சோன்வானி(30) என்ற மனைவி இருந்தார். கருப்பு நிறத்துடன் காணப்பட்ட மனைவியை தொடர்ந்து, அழகாக இல்லை எனக்கூறி கணவர் ஆனந்த் துன்புறுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக ஒருக்கட்டத்தில் கோபமடைந்த மனைவி கோடாரியால் அவரது கணவரை வெட்டி கொன்றுள்ளார். மேலும் கணவரின் மர்மஉறுப்பை அறுத்திருக்கிறார். இருப்பினும் அடுத்தநாள் யாரோ சிலர் தன் கணவரை கொன்றுவிட்டனர் என கிராம வாசிகளிடம் தவறான தகவலை கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பாப்கார்ன் சாப்பிட்ட 1 1/2 வயது குழந்தை…. மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்?…. பெரும் அதிர்ச்சி…..!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் சிராவ்லி காஸ்பூர் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களது 1 1/2 வயது பெண் குழந்தையை தூக்கிகொண்டு சிகிச்சைக்காக பெற்றோர் சென்றுள்ளனர். அந்த குழந்தை பாப்கார்னை சாப்பிட்டதில், அது தொண்டையில் சிக்கி இருந்தது. இதனால் அவசர சிகிச்சையளிக்க சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, இரவு பணியில் இருக்கவேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தா மருத்துவமனையில் இல்லை. இதையடுத்து தகவலறிந்து 1 மணிநேரத்திற்கு பின் மதுபோதையில் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அதன்பின் சிகிச்சையளித்தபோது குழந்தை உயிரிழந்து விட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. 4 % DA உயர்வு…. மத்திய அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு….!!!!!

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது “அகமதாபாத் மற்றும் சிஎஸ்எம்டி, மும்பை போன்ற 3 முக்கிய ரயில் நிலையங்களை மீண்டுமாக மேம்படுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முன்  மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டமானது சுமார் 10,000 கோடி ரூபாய் முதலீட்டை உள்ளடக்கியது ஆகும். இதையடுத்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை(DA) 4 % உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி அரசு, நாட்டின் ஒவ்வொரு பிரிவினருக்கும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பெண் குழந்தை பிறந்தது முதல் படிப்பு, திருமணம் வரை பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டங்களின் நோக்கம், மகள்கள் கல்வி மற்றும் மேம்பாட்டிற்கான முழுவாய்ப்புகளைப் பெறுவதும், அவர்கள் தன்னிறைவு பெறுவதும் ஆகும். தற்போது உங்களுக்கு மோடி அரசாங்கத்தின் மிகவும் லட்சிய திட்டம் பற்றிய தகவலை வழங்க இருக்கிறோம். இதுஒரு சிறு சேமிப்புத் திட்டம் ஆகும். இவற்றில் முதலீடு செய்வதன் வாயிலாக […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 29 ரூபாய் முதலீடு செய்தால் போதும்…. பல லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும் எல்ஐசியின் சூப்பர் திட்டம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களுக்கு லாபம் தரும் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்கு உதவும் வகையில் ஆதார் ஷீலா என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் ரிஸ்க் கிடையாது. எனவே முதலீடு செய்யும் தொகை பாதுகாப்புடன் இருப்பதோடு, உறுதியாக ரிட்டன் கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் கூட திட்டத்தின் பலன்கள் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 55 […]

Categories
தேசிய செய்திகள்

“சிறுமி பாலியல் பலாத்காரம்” திருமணம் செய்து கொள்வதாக குற்றவாளி சமரசம்… கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு ஐபிசி மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளியின் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த குற்றவாளி ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் குற்றவாளி சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு 18 வயது ஆன பிறகு நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஒரு பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது குற்றவாளி தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிபதியிடம் […]

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவில் நிலவிவரும் பணவீக்கத்தை பொறுத்து வருடந்தோறும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போவட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அந்த அடிப்படையில் சென்ற மேமாதம் ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதிகொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 புள்ளிகள் உயர்த்தியது. இதையடுத்து மொத்தவட்டி விகிதம் 4.40 சதவீதம் ஆக அதிகரித்தது. அதன்பின் சென்ற மாதம் ரெப்போவட்டி விகிதம் மீண்டுமாக உயர்த்தப்பட்டு, இப்போது 5.4 % ஆக இருந்து வருகிறது. இந்த ரெப்போவட்டி விகித உயர்வால் வங்கிகளில் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. டிஏ நிலுவைத்தொகை எப்போது?…. விரைவில் முக்கிய ஆலோசனை…..!!!!

மத்திய அரசு சென்ற 2020ஆம் வருடம் கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்தியது. அதுமட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழித்து வந்தது. அத்துடன் தொழில்கள் அனைத்தும் முடங்கி இருந்ததால் வருவாய் தட்டுப்பாடு ஏற்பட்டு, அரசுக்கு பொருளாதார சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொகையை சென்ற 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை செலுத்தாமல் நிலுவையில் வைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. ஐடி நிறுவன ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாட்டில் முன்பு இருந்த நிலையைவிட இப்போது ஐடி நிறுவனங்கள் அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. அத்துடன் ஐடி துறையில் ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக ஐடி ஊழியர்களுக்கு அதிக ஊதியம் கொடுத்து பணியமர்த்த நிறுவனங்கள் தயாராகவுள்ளது. ஆகவே அதிக ஊதியம் வழங்கும் நிறுவனத்தில் பணிவாய்ப்பை அடைந்தால் பழைய நிறுவனத்தைவிட்டு ஊழியர்கள் வெளியேற தயாராகிவிட்டனர். இதனால் ஐ.டி நிறுவனங்கள் திறமையான ஊழியர்கள் தங்களது  நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க இப்போது ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஆகிய சில […]

Categories
தேசிய செய்திகள்

பர்தா அணிய மறுத்த இந்துமத பெண்…. கத்தியால் குத்தி கொடூர கொலை…. கணவர் கைது… பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் இக்பால் ஷேக் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்ஸி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இக்பால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்த தன்னுடைய மனைவி ரூபாலியின் பெயரை சாரா என்று மாற்றியுள்ளார். அதோடு இக்பாலின் குடும்பத்தினர் ரூபாலியிடம் பர்தா […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

இந்த நவராத்திரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிகப் பெரிய செய்தி இருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு பற்றி மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. செப்டம்பர் 30 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் புது அகவிலைப்படி சேர்க்கப்படும். அத்துடன் செப்டம்பர் 28ம் தேதி மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிகிறது. அகவிலைப்படியை 4 % உயர்த்த அரசாங்கம் முடிவுசெய்து இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பண்டிகைகால போனஸ் தொகை…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்….!!!!

இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 1ஆம் தேதி முதல்…. வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. மிக முக்கிய தகவல்….!!!!

வருகிற அக்டோபர் மாதம் துவங்க இன்னும் சில தினங்களே இருக்கிறது. அக்டோபர் 1 முதல் அரசால் மாற்றப்பட்ட பல்வேறு விதிகள் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது சாமானியர்களின் நிதிநிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அனைவரும் இம்மாற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். டிமேட் கணக்குகளில் 2 காரணி அங்கீகாரம் (டூ ஃபாக்டர் அதண்டிகேஷன்), அடல் பென்ஷன் திட்டம், மியூச்சுவல் பண்டுகளில் நியமனம், கார்டு டோக்கனைசேஷன் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி போன்றவை அக்டோபர் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்பிக்கலாம்….. எப்படி தெரியுமா…?

இந்தியாவில் ஓய்வூதியம் பெறும் சீனியர் சிட்டிசன்கள்  ஒவ்வொரு வருடமும் தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றிதழ் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால் அவர்களுக்கு பென்ஷன் கிடைக்காது. இந்த ஆயுள் சான்றிதழை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா பரவலின் காரணமாக ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

இனி திருப்பதியில்…. சில்லறை நாணயங்களை வீசக்கூடாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

திருப்பதி கோவிலின் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி  தர்மா ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி கோவில் உலக  புகழ் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது  வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறுகிறது. இது குறித்து தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி. தர்மா ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை  அளித்துள்ளார். அதில் பிரம்மோற்சவ விழா தற்போது நடைபெறுகிறது.  அதில் தினமும் காலை மற்றும் இரவில் நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

“என் கணவரிடம் கிடைக்காதது அவனிடம் கிடைக்கிறது” கள்ளக்காதலியின் பகீர் கதை….!!!!

இந்தியாவில் கள்ளக்காதல் சம்பவங்கள் நாள்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பான செய்திகளும் தினந்தோறும் பத்திரிகைகளில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த கள்ளக்காதல் என்ற வார்த்தையை உருவாக்கியது மனிதர்கள் தான் என்று தமிழ் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதோடு காதலில் நல்ல காதல் மற்றும் கள்ளக்காதல் என்று ஏதும் இல்லை எனவும் கூறுகிறார்கள். அதை திருமணத்திற்கு மீறிய உறவு என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

“டாய்பாய் போர்ட்டல்”… பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கலாமா?…. பரபரப்பு தகவல்….!!!!

பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் டாய் பாய் எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டு இருக்கிறது. காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில் மனஅழுத்தத்தில் உள்ள பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை எனில் இந்த போர்ட்டல் வாயிலாக புக்செய்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்புகொண்டு டாய் பாய் போர்ட்டலுக்கான ஏபிகே பைலை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயன்பாடு Google Play […]

Categories
தேசிய செய்திகள்

57 வருடங்களுக்குப் பிறகு…. எரிவாயு சிலிண்டர் விநியோகம்…. திருவிழா போல் கொண்டாடும் கிராம மக்கள்….!!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் விஜயநகர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமம் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து கிராமத்திற்கு 157 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்களும் எரிவாயு சிலிண்டருக்காக விண்ணப்பித்துள்ளனர். ஆனால் சரியான ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் யாருக்குமே எரிவாயு சிலிண்டர் கிடைக்கவில்லை. இந்நிலையில் 57 வருடங்களுக்கு பிறகு 15 குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கன்டிஷனா?… திருமண நிகழ்ச்சியில் ஆதார் இருந்தா மட்டும் தான் சோறு…. ஷாக் நியூஸ்….!!!!

திருமண நிகழ்ச்சியில் ஆதார் அட்டை கொண்டுவந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையை காட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில் வித்தியாசமான அணுகுமுறையால் நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமணம் ஈர்த்து இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டை காட்டும் விருந்தினர்களை […]

Categories
தேசிய செய்திகள்

யாராச்சு என்னை காப்பாத்துங்க!…. காட்டு யானைகளின் நடுவில் சிக்கிய நபர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் காட்டுயானைகளின் நடுவில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத் தலமான மூணாறு அருகில் தன் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த சஜி என்ற இளைஞர் திடீரென்று காட்டு யானைகளின் கூட்டம் நடுவில் சிக்கிக் கொண்டார். யானைகள் கூட்டம் தன்னை நோக்கி வருவதை பார்த்த சஜி, அவைகளிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் அவரால் ஓட முடியவில்லை. இதனால் அங்கு இருந்த உயரமான யூகலிப்டஸ் மரத்தில் ஏற முயற்சித்தான். […]

Categories
தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி…. எத்தனை சதவீதம்?…. தமிழ்நாடு அரசு விடுவிப்பு….!!!!

ஒருதொகுதிக்கு ரூ.3 கோடி என்ற அடிப்படையில் பாதி நிதியை ஒதுக்கீடு செய்து திட்டத்தினை வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு வருடந்தோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களது தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். 2022-2023 ஆம் வருடத்திற்கான எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.702 கோடியில் 50 சதவீதமான ரூ.351 கோடியை தமிழ்நாடு அரசு விடுத்துள்ளது. ஒரு தொகுதிக்கு 3 கோடி எனும் அடிப்படையில் பாதிநிதியை ஒதுக்கீடு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து…. மின்னல் வேகத்தில் வந்த கார் மோதியதில்…. பரிதாபமாக 6 பேர் பலி….!!

ராஜஸ்தானில் வேகமாக வந்த கார் விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள மாணவர்கள் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்பொழுது கார் சதார் காவல் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு ட்ரக்குகள் மீது மோதி பயங்கர விபத்திற்குள்ளானது. அங்கு கட்டிலில் அமர்ந்திருந்த காவலாளி உட்பட காரில் பயணித்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மாணவர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

“வாடகை தாய் சட்டம்” பெண்களின் உரிமையை பறிப்பதாக மனு தாக்கல்….. மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு….!!!

சென்னை சேர்ந்த அருண் முத்துவேல் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த சட்டம் போன்றவைகள் ஒரு தலைப்பட்சமாக இருப்பதுடன், வேறுபாடு களையும் உருவாக்குகிறது. இந்த சட்டங்கள் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கும், அந்தரங்க உரிமைகளுக்கும் எதிராக இருக்கிறது. அதோடு சமத்துவ உரிமை மற்றும் தனிமனித உரிமைக்கும் எதிராக இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“சீன எல்லையில் மோதல் போக்கு” பிரச்சனைகளை சந்திக்க தயார்….. பெண் விமானி அதிரடி பேட்டி….!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் நகரின் கிழக்குப் பிரிவில் சீன எல்லையை ஒட்டி இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு சுகோய்‌ ரக சூ-30 போர் விமானத்தில் எலக்ட்ரானிக் போர் சாதனங்கள் மற்றும் புதுவிதமான ஆயுதங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய விமான படையின் ஆயுத தாக்கல் பிரிவில் லெப்டினன்ட் தேஜஸ்வி எனும் ஒரே ஒரு பெண் விமானி மட்டும் பணியாற்றுகிறார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்திய விமான படையின் […]

Categories
தேசிய செய்திகள்

PFI இடங்களில் மீண்டும் ரெய்டு…. 64 பேர் கைது…. ரூ. 120 கோடி ஹவாலா பண பரிமாற்றம்….. அதிகாரிகள் அதிரடி….!!!!

டெல்லியை தலைமையிடமாக கொண்டு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நிதி திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றத்தை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியதால் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அதிரடி சோதனையின் போது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினை சேர்ந்த 103 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை…. வீட்டுக்குள் அடைத்து வைத்த விமான பணிப்பெண்…. பரபரப்பு….!!!!

டெல்லியில் தனியார் விமானம் நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவர் மெஹ்ருலி பகுதியில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு, ஒரு ஆண் நபருடன் சென்ற 2 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சியை சேர்ந்த அந்நபர் பகுதி தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விமான பணிப் பெண்ணின் வீட்டுக்கு நேற்றிரவு அந்த ஆண் நபர் மது போதையில் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பட்டப் பகலில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்….. சுற்றி வேடிக்கை பார்த்த பயங்கரம்….‌ பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டௌராலா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19-ஆம் தேதி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்ட பகலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை 2 பேர் கொடூரமான முறையில் அடித்து தரையில் இழுத்துச் செல்கின்றனர். அந்தப் பெண் தனக்கு உதவுமாறு கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இந்த சம்பவத்தை ஒரு கூட்டமே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. இருப்பினும் வேடிக்கை பார்க்கும் கூட்டம் அந்த பெண்ணுக்கு உதவாமல் வீடியோ […]

Categories
தேசிய செய்திகள்

இனி பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் காவல்துறையின் தடையில்லாச் சான்று பெற…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் காவல்துறையின் தடை இல்லாச் சான்று (பிசிசி) பெற இனி அனைத்து இணையவழி தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவு அமைச்சகம் சாா்பாக தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு காவல்துறையின் தடை இல்லாச் சான்று கட்டாயம் ஆகும். எனினும் இந்தத் தடை இல்லாச் சான்றிதழை வழங்குவதில் உள்ளூா் காவல்துறையினர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொள்வதால், விண்ணப்பதாரா்களுக்கு கடவுச்சீட்டு விநியோகப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதை கருதி தடை இல்லாச் சான்றை விரைந்து […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்…. ஆதார் கார்டு மட்டும் போதும்…. ஆஃப்லைனில் வங்கி பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்…. எப்படி தெரியுமா…?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டையை வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைத்த பிறகு ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி வங்கியில் உள்ள இருப்பு தொகையை தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் இணைப்பு கட்டாயம் இல்லை. இதனையடுத்து செல்போன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

உடற்பயிற்சியில் சவால்…. வெற்றியடைந்தால் ரூ.10 லட்சம்…. ஊழியர்களுக்கு வேற லெவல் அறிவிப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான செரோதா(Zerodha) தன் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ நிதின் காமத் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உடற்பயிற்சியின் வாயிலாக உடல் நலனை சரியான அளவில் பேணும் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுதொகையை அறிவித்து இருக்கிறார். கொரோனா பேரிடர்போது பல்வேறு நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்ய துவங்கினர். வீட்டிலிருந்தே பணிபுரிந்ததில் ஊழியர்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மேலுள்ள கவனம் குறைத்து இருப்பதாக சிஇஓ நிதின் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான பள்ளி வேன்…. காயமடைந்த குழந்தைகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலமான தானேபகுதியில் இன்று காலை ஒரு பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்நிலையில் சறுக்கலான பாதையில் டிரைவர் பின்னோக்கி போக முற்பட்டார். அப்போது  திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வேனிலிருந்து மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையில் சில குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த இளம்பெண் கொலை வழக்கு” கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மூத்த தலைவரின் பரபரப்பு பேட்டி…..!!!!

உத்திரகாண்ட்  மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]

Categories
தேசிய செய்திகள்

18 மாதங்களாக பாதுகாக்கப்பட்ட இறந்தவரின் உடல்…. பின்னணி என்ன?…. தீவிர விசாரணை….!!!!

கொரோனா காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன் இறந்த 35 வயது நபரின் உடலுடன் அவரது குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததன் பின்னணி என்ன என்பது தொடர்பாக கான்பூர் காவல்துறையின் சிறப்பு விசாரணையை துவங்கியிருக்கிறது. அந்த விசாரணைக் குழுவை அமைத்து காவல்துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்விசாரணை குழுவினர் 2 முக்கியமான விஷயங்களை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இத்தனை மாதங்களாக உடல் அழுகாமல் இருக்க அந்தக் குடும்பத்தினர் எந்த முறையைக் கையாண்டனர். அத்துடன் என்ன காரணத்திற்காக […]

Categories
தேசிய செய்திகள்

விமானப்படை பயிற்சி வீரர் தற்கொலை…. 6 உயர் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

டெல்லியில் உள்ள உத்தமநகரில் அங்கிங் குமார் ஜா என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் விமானப்படைக்கு தேர்வானதால் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பயிற்சி பெற்று வந்துள்ளார். அந்த பயிற்சியின் போது  வாலிபர் விதிமுறைகளை மீறியதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த வாலிபர் கடந்த 21-ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.‌ அப்போது வாலிபரின் அறையிலிருந்து 7 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் கண்டறியப்பட்டுள்ளது. அதில் உயர் […]

Categories
தேசிய செய்திகள்

மனிதக் கழிவுகளை உண்ண வற்புறுத்திய கொடூரம்…. சூடு வைத்து சூனியக்காரி பட்டம் கட்டப்பட்ட பெண்கள்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்களை சிலர் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த பெண்களுக்கு சூனியக்காரி பட்டத்தை சூட்டியுள்ளனர். அதன்பிறகு இரும்பு கம்பியை சூடாக்கி ‌4 பெண்களின் உடம்பிலும் சூடு போட்டதோடு, மனித கழிவுகளை உண்ணும் மாறும் வற்புறுத்தியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டனர். அதன்பின் பெண்களிடம் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் பயனாளர்களே!… உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்….!!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் இல் தோன்றும் வீடியோவை ஒரு நிமிட ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். இதற்கு முன்பு 15 வினாடிகள் இருந்த நிலையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளலாம் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்டம் கடந்த வருடம் நடந்தது. இந்த முடிவின் அடிப்படையில் தற்போது ஒரு நிமிட வீடியோவை ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிகம் லாபம்” போஸ்ட் ஆபீஸில் உங்களுக்கான சூப்பர் திட்டம்…. இதோ முழு விபரம்….!!!!

பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதற்கு வங்கி மற்றும் தபால் அலுவலகத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் தான் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிலையில் குறுகிய காலத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் ஒரு சூப்பரான திட்டம் இருக்கிறது. அதாவது போஸ்ட் ஆபீஸில் டைம் டெபாசிட் கணக்கை தொடங்கிக் கொள்ள வேண்டும். இதில் 8.50 லட்ச ரூபாய் முதலீடாக நீங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி விதி”…. வரப்போகும் புது மாற்றம்…. மத்திய அரசு தகவல்….!!!!

ஊழியர்கள் நலன் கருதி மத்திய அரசு 4 புதிய தொழிலாளர் குறியீடுகளை விரைவில் நடைமுறைபடுத்த போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி தெரிவித்து இருக்கிறார். இந்த புது தொழிலாளர் குறியீடானது நடைமுறைக்கு வந்தபின் , ஊழியர்களின் சம்பளம், விடுப்பு, வருங்கால வைப்புநிதி மற்றும் கிராஜுவிட்டி ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது. இதன் வாயிலாக கிராஜுவிட்டி பெறுவதற்கு ஊழியர்கள் தொடர்ந்து 5 வருடங்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை இருக்காது. எனினும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 ஆம் தேதி முதல்…. வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து கேஸ் சிலிண்டர் விலை வரை பல்வேறு மாற்றங்கள் இவற்றில் அடங்கும். ஆகவே வரும் 1ம் தேதியிலிருந்து எந்தெந்த விதிகள் மாறப் போகிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம். சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களானது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு மூலம் பரிசீலிக்கப்படும். ஆகவே பிபிஎப், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்றவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

“முன்னாள் காதலியுடன் கணவருக்கு 2-ம் திருமணம்” முதல் மனைவியின் வினோத செயல்…. திருப்பதியில் நடந்த சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் கல்யாண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற இளம் பெண் விமலாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண் விமலாவிடம் நானும் கல்யாணும் உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக காதலித்து வந்தோம். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

விலை உயர்ந்த சைக்கிளை வெறும் ரூ.2,000-க்கு விற்ற பலே திருடன்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ஹரியானாவில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி, அதை ரூ.2,000, 3,000-க்கு விற்பனை செய்துவந்த திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கைதான திருடனிடம் இருந்து சுமார் 62 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர் ரவிக்குமார் என்பதும், இவர் பஞ்ச்குலாவிலுள்ள மஜ்ரி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவருவதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். அதாவது ரவிக்குமார் பஞ்ச்குலாவை சுற்றி இருக்கும் பல பகுதிகளில் சைக்கிள்களை திருடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக சென்ற 14 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் திடீரென அதிகரித்த வீட்டு வாடகை” சென்னையில் மட்டும் இவ்வளவா….? வெளியான ஷாக் நியூஸ்….!!!!

புனே, கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் சொகுசு வீடுகளுக்கான வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த தகவலை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற நகரங்களை விட மும்பையில் வாடகை அதிக அளவு உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி மெட்ரோ பகுதியில் உள்ள சொகுசு வீடுகளுக்கான வாடகை 2.7 லட்சம் ரூபாயிருந்து 3.1 லட்சமாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு வொர்லி பகுதியில் 2 லட்ச ரூபாயிலிருந்து 2.35 […]

Categories
தேசிய செய்திகள்

உஷ்..உஷ்…என கேட்ட சத்தம்…. புத்தகப்பையை திறந்து பார்த்த ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பள்ளியில் பரபரப்பு…..!!!!

பள்ளிக்கு சென்ற சிறுவனின் புத்தகப் பையில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியபிரதேசம் மாநிலம் தாடிய மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் புத்தகப் பையைத் திறக்கும்போது உள்ளே இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் சிறுவன் புத்தகப் பையில் ஏதோ இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான். அதனை தொடர்ந்து மாணவனின் புத்தகப் பையைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து புதருக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. படகு கவிழ்ந்து” 23 பேர் பலி”…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

படகு மூழ்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள பஞ்சவர் மாவட்டத்தில்  ஒரு படகில் ஏராளமானோர் சென்றுள்ளனர். ஆனால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. படகில் அதிக சுமை மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏராளமான சென்றுள்ளனர். இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 23 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீதமுள்ளவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்…. வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்….!!!!

மும்பையில்  ஏராளமானோர் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது. மேலும் மும்பை இந்தியாவின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் நவி மும்பை மற்றும் தானே  அருகில் உள்ள புறநகரங்களில் மட்டும் ஏறத்தாள 19 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 5 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 25 சதவீதமும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 சதவீதம் அளித்து இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் பெரிய பிரச்சனையாக உள்ளது…. காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஒரு  காணொளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது. கடற்கரைகளுக்கு செல்லும் பொதுமக்கள் அங்கு தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கே போட்டு செல்கின்றனர். ஆனால் அந்த குப்பைகளை அகற்றுவது பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சவாலை சமாளிப்பதற்காக தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது. மேலும் வருகின்ற 28-ஆம் தேதி பகத்சிங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

என் கடிகாரம் எப்படி இருக்கு?…. ஃபேஸ்புக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட சுவாரஸ்ய பதிவு…. குவிந்து வரும் வாழ்த்துக்கள்…..!!!!

பாமக நிறுவனர் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவன ராமதாஸ் தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இவர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில்  அரசியல், சமூகம் போன்ற பதிவுகளை மட்டும் இன்றி தன் வாழ்வில் நிகழும் சுவாரசியமான நிகழ்வுகளையும் பதிவிட்டு தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். அதேபோல் தற்போது தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு கூடுதல் படித்தொகை ரத்து…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பு….!!!!

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2009-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலங்களில் பணிபுரியும் அனைத்திந்திய சேவை ஊழியர்களுக்கும் கூடுதல் படித்தொகை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் படித்தொகை வழங்கப்பட்டது. அசாம், மேகாலயா, மணிப்பூர், திரிபுரா, நாகலாந்து, சீக்கிம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அனைத்திந்திய ஊழியர்களுக்கு சம்பளத்திலிருந்து 25% சிறப்பு படியாக வழங்கப்பட்டது. இந்த சிறப்பு படி தொகையை மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

புதுசா போடப்பட்ட சாலையில் பள்ளம்…. இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு நேர்ந்த கதி?… பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் ஜோத்பூர் இரயில் நிலையம் அருகில் அண்மையில் புதியதாக சாலை போடப்பட்டது. இச்சாலை வழியே பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை லாரியைப் பின் தொடர்ந்து சென்ற இருசக்கர வாகனம் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் வாகனத்தை ஓட்டிச்சென்ற நபர் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்திருக்கிறார். அவரை அக்கம் பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். அதன்பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடைத்தைச் […]

Categories

Tech |