உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான்மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளுடிக்கிற்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில் டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான்மஸ்க் முடிவுசெய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் 50 % ஊழியர்களை நீக்கம் செய்ய எலான்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக […]
