அசாமின் வெள்ள நிவாரண பணிக்காக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி நிதி உதவி வழங்கியதற்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி 112 பேரும், நிலச்சரிவில் 26 பேரும் சேர்த்து மொத்தமாக 138 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அவருக்கு […]
