Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து அவதியுறும் இளைஞர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நண்ட்லேடா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் முடிகள் வளர்ந்து குரங்கு மனிதரை போல் காணப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அரிதிலும் அரிதான Were Wolf Syndrome என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள லலித்துக்கு 6 வயதில் இப்படி ஒரு அரிதான நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களால் அதிக துன்புறுத்தலுக்கு ஆளானதாக லலித் கூறுகின்றார். பிறக்கும்போதே அதிக அளவு முடி இருந்ததால் மொட்டை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

மசூதிக்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைய தடை…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

டெல்லியின் ஜாமாமசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்குள் பெண்கள் தனியாகவும், குழுவாகவும் நுழைவதை தடைசெய்ய முடிவு செய்து இருக்கிறது. அண்மையில் மசூதியின் அலுவலகம் மசூதி வளாகத்துக்குள் இசையுடன் கூடிய வீடியோக்களை படமாக்க தடைவிதித்து இருந்தது. ஷாஹி இமாம் சையத் அகமது புகாரின் உத்தரவுப்படி பாரம்பரிய கட்டமைப்பின் வளாகத்தில் சில சம்பவங்கள் பதிவாகியதை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் இம்முடிவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் “அம்மசூதிக்குள் பெண்கள் நுழைவதற்கு தடைவிதித்த முடிவானது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. புது வகை வங்கி மோசடி…. டிஜிபி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

நாடு முழுவதும் மக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் மற்றும் பணபரிமாற்ற செயலிகள் மூலமாகவும் பணத்தை அனுப்புகின்றனர். அத்துடன் மற்றவர்களிடம் இருந்தும் பணத்தை பெறுகின்றனர். இதனால் தற்போது வங்கிகளுக்கு செல்லவேண்டிய அவசியமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இவ்வாறு பணபரிமாற்றம் செய்து வரும் நேரத்தில் சில மோசடிகளும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் புது நெட் பேங்கிங் மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை…. மாநில கல்வித்துறை அறிவிப்பு…..!!!!!

கேரள  மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி துவங்கி மார்ச் 29-ம் தேதி முடிவடைகிறது. அத்துடன் மாதிரித் தேர்வுகள் பிப்ரவரி 27-ம் தேதி துவங்கி மார்ச் 3-ம் தேதி முடிவடைகிறது. 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் வழியே யுபிஐ எண்…. எப்படி மாற்றுணும் தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…..!!!!

உள் நாட்டு டிஜிட்டல் செயலியான Paytm வாயிலாக வாடிக்கையாளர்கள் எளிமையாக பணப் பரிமாற்றம் செய்யலாம். Paytm வாடிக்கையாளர்கள் செயலியில் தங்களது UPI பின்னை எளிதாக உருவாக்கலாம் அல்லது மாற்றலாம். தற்போது Paytm வழியே உங்களது UPI பின்னை மாற்றுவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # உங்கள் ஸ்மார்ட் போனில் Paytm செயலியை திறக்க வேண்டும். # செயலியின் இடதுபக்கத்தில் உள்ள Paytm புரோபைல் பக்கத்துக்கு செல்லவேண்டும். # கீழே ஸ்க்ரோல் செய்து UPI மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம்…. எதற்காக தெரியுமா?…. ரயில்வே துறை அதிரடி….!!!!

இந்திய ரயில்வேயில் சரியாக செயல்படாத, ஊழல், முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்களை ரயில்வே துறை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் சென்ற 16 மாதங்களில் 177 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஜூலை 2021 முதல் நாளொன்றுக்கு 3 பணியாளர்கள் வீதம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 139 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு 38 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர். 2 மூத்த அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறினார். அவர்களில் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

நோயாளிக்கு Blood கொடுத்து…. உயிரை காப்பாற்றிய மருத்துவர்….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டதா?…. அதிர்ந்து போன நீதிபதிகள்…. பின் வெளிவந்த பரபரப்பு உண்மைகள்…….!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா போலீஸ் நிலையத்தில் சென்ற சில வருடங்களில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2018, 2019ம் வருடங்களில் மதுரா காவல்துறை நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் 581 கிலோ கஞ்சா கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து இருக்கின்றனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்வதற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கனானது  நாளை (நவ..25) தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் நாளை (நவ..25) காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகவே இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!!

EPFO ​​ஊழியர்களுக்கு மத்திய அரசானது ஒரு பெரிய பரிசை வழங்கி இருக்கிறது. அதாவது, PF வட்டிப்பணம் விரைவில் உங்களது கணக்கில் கிரெடிட் செய்யப்படும். 2022-ம் நிதி ஆண்டுக்கான வட்டிப்பணம் உங்களது கணக்கில் வரத் துவங்கிவிட்டது. எனினும் இதற்கு பிறகும் பலரின் கணக்கில் வட்டி தொகை கிரெடிட் செய்யப்படவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது, சாப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசானது PFக்கு 8.1% வட்டியை கொடுக்கிறது. இந்த வட்டிவிகிதம் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

தட்டம்மை பாதிப்பு: புதியதாக 30 பேருக்கு உறுதி…. ஒருவர் இறப்பு…. வெளியான தகவல்…..!!!!

மராட்டிய மாநிலம் மும்பை நகரில் தட்டம்மை பாதிப்பானது அதிகளவில் பரவுகிறது. அதன்படி புதியதாக 30 நபர்களுக்கு தட்டம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே நேரம் 22 நோயாளிகள் சிகிச்சை முடிந்து திரும்பி சென்று உள்ளனர். மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய அடிப்படையில் 156 நபர்களுக்கு புதியதாக தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த வருடத்தில் இதுவரையிலும் மும்பையில் 233 நபர்களுக்கு இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 8 மாத ஆண்குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

வேற்று மத நபரை கரம் பிடித்த பெண் மீது…. உறவினர் நடத்திய துப்பாக்கிசூடு…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சில பேர் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றில் அப்பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அப்பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்து உள்ளார். வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவுசெய்து இருக்கிறார். இதனால் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்ன கொடுமைடா சாமி!…. இளைஞரை கடத்தி…. 4 பெண்கள் செய்த கொடூர செயல்…. உச்சக்கட்ட பரபரப்பு…..!!!!!

பஞ்சாப் ஜலந்தரிலுள்ள ஒரு பேக்டரியில் தொழிலாளியாக பணிபுரியும் நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அக்காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம் பெண்கள் இருந்து உள்ளனர். இதையடுத்து காரிலிருந்த இளம் பெண்கள் ஒரு துண்டு சீட்டை நீட்டி அந்நபரிடம் கொடுத்து முகவரி விவரம் குறித்து கேட்டு உள்ளனர். இதை உண்மை என நம்பிய அந்நபர் சீட்டை வாங்கி படித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கள பார்த்ததும்!…. பயத்தில் டக்குன்னு கஞ்சாவை விழுங்கிய நபர்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் கோட்டயம் ஏட்டுமானூரில் கலால் துறையினரை கண்டு கஞ்சாவை விழுங்கிய இளைஞர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட நபர்  மம்மூட்டைச் சேர்ந்த லிஜூமோன் ஜோசப் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சங்கராந்தி-பேரூர் சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. ஏட்டுமானூர் கலால் குழுவினர் மம்மூட் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த லிஜூமோன் உடல் பரிசோதனைக்கு பயந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் கலால் குழுவினர் அவரை கையும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு வேலை தேடுபவர்களே!…. மாதந்தோறும் 16 லட்சம் பேருக்கு…. ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!!

அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!!…. இரவு முழுவதும் “தொழிலாளியை பலாத்காரம் செய்த 4 பெண்கள்”…. தொழிலாளி அளித்த பரபரப்பு வாக்குமூலம்….!!!!

ரோட்டில் நடந்து சென்று நபரை கடத்தி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் உள்ள கபுர்தலா  சாலையில் கடந்த திங்கட்கிழமை ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நோக்கி ஒரு கார் வந்துள்ளது. அந்த காரில் 20 வயது மதிக்கத்தக்க 4 இளம்பெண்கள் இருந்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த பெண்கள் ஒரு துண்டு சீட்டை அந்த நபரிடம் கொடுத்து முகவரி விவரம் கேட்டுள்ளனர். அவர்கள் கூறியதை நம்பிய அந்த நபர் வாங்கி படித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா பகுதியில் யூகப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம்  வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோ கால் மூலமாக யூகப் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். மேலும் வீடியோ காலின் மூலம் யூகப் மாணவியின் சில அந்தரங்க காட்சிகளையும் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!!…. “ட்ரெண்டான 5 மோசடிகள்” என்ன தெரியுமா?… கூகுள் அண்ணன் சொல்வதை நீங்களே கேளுங்க….!!!!!

கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தற்போது பண்டிகை காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பரிசு கூப்பன், பரிசு பொருள் போன்றவற்றில்  அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் தற்போது  மோசடிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாள்தோறும் 1,500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள் பயனாளர்களிடம்   சேராமல் தடுக்கப்படுகிறது. இதனையடுத்து 99.9 சதவீதம் விளம்பர, மோசடி, முறைகேடு தவறான மிஞ்சல்கள்  மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே பாருங்க…. ஜியோ வழங்கும் இலவச வெல்கம் ஆஃபர்…. பெறுவது எப்படி? முழு விவரம் இதோ….!!!!

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ இந்தியாவில் உள்ள டெல்லி, என்சிஆர், சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், வாரணாசி உள்ளிட்ட 8  இடங்களில் 5ஜி  சேவை முகேஷ் அம்பானி தலைமையில் அறிமுகம்  செய்தனர். இந்த சேவையில் எந்த கட்டண அமைப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் பீட்டா எனப்படும் பரிசோதனை நிலையிலேயே இருக்கும் 5ஜி  சேவை இலவசமாக பெற ஜியோ நிறுவனமே சில வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. 5ஜி சேவையை பெற தகுதியான […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப், காவி உடை விவகாரம்….. பள்ளியில் வெடித்த கலவரம்…. இவர்களுக்கான தேர்வு ரத்து?…. பரபரப்பு…..!!!!!

மேற்கு வங்காளம் ஹவுரா நகரில் துலாகார் பகுதியில் மாணவ-மாணவிகள் படிக்ககூடிய உயர்நிலை பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் சென்ற திங்கட்கிழமை மாணவர்கள் சில பேர் நாமபாலி எனப்படும் காவி உடையான மேல் துண்டை அணிந்து சென்று இருக்கின்றனர். இதற்கு ஹிஜாப் அணிந்து இருந்த மாணவிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பள்ளி சீருடை அல்ல என ஒருவர் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவர்கள், மாணவியை நோக்கி பிறகு நீ ஏன் ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறாய்..? என்று […]

Categories
தேசிய செய்திகள்

மொழிக்கு மதம் என்பது கிடையாது!… நிரூபித்து காட்டி முதல் பரிசை வென்ற பள்ளி மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

கேரளா கோழிக்கோடு மாவட்டத்தில் தொட்டானூர் துணை மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவற்றில் செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4ஆம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றார். இதையடுத்து மேடையில் அனைவர் முன்னிலையிலும் பார்வதி குரானை ஒப்புவித்து ஏ கிரேடு உடன் முதல் பரிசை பெற்றார். இந்து மாணவியான இவர் அரபி மொழியில் அடுக்கடுக்காக பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மேலும் இவரது இரட்டை சகோதரியான பர்வானாவும் அரபிமொழியில் சிறந்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் புத்தாண்டு பரிசு?…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

2023ம் வருடம் அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய நற்செய்தியை அரசு கொண்டுவர போகிறது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கை படி, புத்தாண்டில் மத்திய ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயர்த்தப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு அரசிடம் இருந்து 3 பம்பர் பரிசுகள் கிடைக்கப் போகிறது. அதாவது, 2023 ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி 4 % உயர்த்தப்பட்டால், அது 42 சதவீதம் ஆக உயரும். 2024 தேர்தலுக்கு முன்பு ஊழியர்களுக்கு கூடுதல் பரிசுகளை வழங்குவது […]

Categories
தேசிய செய்திகள்

லாஸ்ட் மினிட்ல உங்க ரயில் டிக்கெட்டை கன்பார்ம் பண்ணனுமா?…. இதோ சூப்பர் ஐடியா….!!!!!

கன்பார்ம் ரயில் டிக்கெட் பெறுவதற்கு ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது. அதுகுறித்து நாம் இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான irctc.co.in-க்குச் சென்றால் நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சிக்கும் நேரத்தில் இருக்கைகள் நிரம்பி விடும். அத்தகைய நிலையில் விரைவில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய அமைப்பை இங்கே தெரிந்துகொள்வோம். ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள் நுழைந்த பின், வலது பக்கத்தில் சில விருப்பங்களைப் பெறுவீர்கள். அவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை எதிரொலி!…. அமேசான் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சம்மன்….!!!!!

அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளது. அமேசான் ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. ஊழியர் சங்கத்தின் புகாரின் படி அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தன் நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமேசானிலிருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெயிலில், வருகிற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பணிநீக்க செயல்முறையை […]

Categories
தேசிய செய்திகள்

விமான சேவையை விரிவுபடுத்தும் நோக்கம்…. ஏர் இந்தியா வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் அடிப்படையில் ஏர் இந்தியா இன்று மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதியதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி இருக்கிறது. மும்பை நகருடன் நியூயார்க், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடை நில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் அடிப்படையில் தில்லி நகர் கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா போன்ற நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது. புது […]

Categories
தேசிய செய்திகள்

குக்கா் குண்டு வெடிப்பு சம்பவம்: குற்றவாளி WhatsApp-ல் ஆதியோகி சிவன் படம்…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை….!!!!

மங்களூருவில் ஆட்டோ ஒன்றில் நிகழ்ந்த குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி தன் வாட்ஸ் அப் டிஸ்ப்ளே புகைப்படமாக கோவையில் அமைந்திருக்கும் ஆதியோகி சிவன் சிலையை வைத்து இருந்தது காவல்துறையினருக்கு பல சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. சென்ற செப்டம்பர் மாதம் தமிழகத்தில 3 நாட்கள் வந்து தங்கியிருந்தபோது, குற்றவாளி முகமது ஷாரிக் (24) எடுத்த அந்தப் புகைப்படத்தை தன் வாட்ஸ்அப் டிஸ்ப்ளேவில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. தன் அடையாளத்தை மறைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து… டிரெண்டாகி வரும் #2CModelOfGujarat ஹேஸ்டேக்…!!!!

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி  என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க டூப்ளிகேட்டா?…. ராணுவத்தில் 4 மாதங்கள்….. வெளியான பரபரப்பு உண்மைகள்…..!!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ராணுவத்தில் கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இளைஞர் ராணுவப் பணியில் சேர்க்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சிகர உண்மை தெரியவந்திருப்பதாக அவர் தரப்பில் அளிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராணுவ அடையாள அட்டை, ராணுவ சீருடை உடன் அவர் போலீஸ் நிலையத்தில் அளித்து இருக்கும் புகார் ராணுவத்தில் ஆள் சேர்ப்பில் நடைபெற்ற அதிர்ச்சியளிக்கும் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுவதாவது, உத்தரப்பிரதேசம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு: “துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன்”…. சிக்கிய பரபரப்பு புகார் கடிதம்…..!!!!

அப்தாப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியிலுள்ள தன் வீட்டில் 3 வாரங்களாக குளிா் சாதன பெட்டியில் வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அப்தாப் அந்த உடலின் பாகங்களை நகரின் பல இடங்களிலும் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. திருமணம் செய்யாமலேயே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“சொத்துகளைப் பணமாக்கும் திட்டம்”…. நடப்பு நிதியாண்டில் எவ்வளவு கோடி வருவாய்?…. மத்திய அரசு தகவல்…..!!!!

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உள் கட்டமைப்பு சொத்துகளைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதி ஆண்டில் இதுவரையிலும் ரூபாய்.33,422 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. நாட்டில் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்காக புதுமையான மாற்று வழிகளில் நிதி திரட்டும் நோக்கில் சொத்துக்களைப் பணமாக்கும் திட்டத்தினை மத்திய அரசு சென்ற ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அந்த வகையில் மத்திய அரசின் உள் கட்டமைப்பு சொத்துக்களை 4 வருடங்களில் பணமாக மாற்றி, அதன் மூலம் ரூபாய்.6 லட்சம் கோடி திரட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிக்கப்படுமா?…. நிதியமைச்சா்கள் குழு பரிந்துரைக்க வாய்ப்பு….!!!!

GST விதிப்பில் மாற்றங்கள் புகுத்துவது குறித்து மேகாலய முதல்வரும் நிதி அமைச்சருமான கான்ராட் சங்மா தலைமையிலான மாநில நிதியமைச்சா்கள் குழு ஆராய்ந்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% GST விதிப்பதற்கு அந்த குழு பரிந்துரைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இப்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18% GST விதிக்கப்படுகிறது. திறன்சாா்ந்த இணையவழி விளையாட்டுகள், வாய்ப்புகள் சாா்ந்த விளையாட்டுகள் என அனைத்துக்கும் தற்போது அதிகபட்சம் GST வரம்பான 28 சதவீதத்தை விதிக்க அமைச்சா்கள் குழு பரிந்துரைக்க இருக்கிறது. ஆகவே அனைத்துவித […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாங்கதான் அதில் First இருக்கோம்!…. கெத்து காட்டும் ஏர் இந்தியா…. வெளியான தரவரிசை பட்டியல்….!!!!

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற 4 மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள் நாட்டு விமானங்களின் நேர செயல் திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதனடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை உரிய நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து 2ஆம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் இருக்கிறது. அத்துடன் இந்த வருடம் உள் நாட்டு விமான […]

Categories
தேசிய செய்திகள்

12 பா.ஜ.க நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கம்…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

குஜராத் சட்ட சபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1, 5 போன்ற தேதிகளில் ஓட்டுப் பதிவு நடைபெற இருக்கிறது. டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல்கட்ட தேர்தலின் போது 89 தொகுதிகளுக்கும், 5ஆம் தேதி 2வது கட்ட தேர்தலின் போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து டிச..8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். அம்மாநிலத்தில் சென்ற 1995ம் வருடம் முதல் ஆட்சி அதிகாரத்திலுள்ள பா.ஜ.க. இம்முறையும் வெற்றியை தக்க வைத்துகொள்ளும் பணிகளில் இறங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

அன்று மசாஜ்… இன்று தடபுடலான உணவு…. சிறையில் மந்திரி சத்யேந்தா் ஜெயினின் சொகுசு வாழ்க்கை…. பரபரப்பு வீடியோ….!!!!!

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ பதிவுசெய்த வழக்குப்பதிவு அடிப்படையில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் டெல்லி மந்திரி சத்யேந்தா் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் போன்றோருக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சத்யேந்தர் ஜெயினின் ஜாமீன் மனுவை சென்ற வியாழக்கிழமை நீதிமன்றமானது தள்ளுபடி செய்தது. சில நாட்களுக்கு முன்பு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் மசாஜ் செய்துகொள்ளும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே!… குழந்தைகளுக்கான பால் ஆதார் புதுப்பிப்பு இலவசம்….. அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டுகளை வழங்கும் நிறுவனமான UIDAI, நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்களது ஆதார் அட்டைகளைப் புதுப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளது. சென்ற 10 வருடங்களில் மீண்டும் ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்காத குடிமக்கள் தங்களது ஆதார் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என UIDAI கூறியுள்ளது. ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்ததேதி ஆகிய விபரங்களைப் புதுப்பிக்க ரூபாய்.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர்த்து உங்கள் ஆதார் கார்டில் கைரேகை, கருவிழி ஆகிய பயோமெட்ரிக் […]

Categories
தேசிய செய்திகள்

எஃப்டி கணக்குக்கு அதிக வட்டி…. எந்த வங்கியில் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தினை அதிகரித்ததில் இருந்து பல்வேறு வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது RBI ரெப்போ விகிதங்களை 4 புள்ளிகள் உயர்த்தி இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் துவங்கி பல வங்கிகள் நிலையான வைப்புத் தொகைக்கான (எஃப்டி) வட்டியை அதிகரித்து வருகிறது. பொது, தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகளின் வட்டி விகித உயர்வைப் பார்க்கும் போது இனி  நிலையான வைப்புத்தொகைகளுக்கு நல்ல விதத்தில் வட்டிவிகிதம் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. உடனே இந்த வேலையை செய்து முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

இப்போது மாதந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் EPFO கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே நீங்கள் இதுவரை உங்களது நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை எனில், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். முதன் முதலில் உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்யவும். இதை முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் எனில் இதற்கு பாஸ்வேர்டை உருவாக்கவும். இச்செயல்முறையை முடித்தப் பிறகு பின்வரும் வழிமுறைமுறைகளை பின்பற்ற […]

Categories
அரசியல்

எஜமானனுக்காக வயலில் வேலை செய்யும் நாய்… விவசாயிகளுக்கே டப் கொடுக்குதே..!!!

எஜமானனுக்காக வயலில் வேலை செய்யும் நாய் குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மனோஜ் சர்மா என்பவர் தனக்கு உதவிய தன் நாய் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குட்டை இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று சோழ பயிர்களை தனது கூர்மையான பற்களால் வெட்டி சாய்கின்றது. நாய் வேக வேகமாக வேலை செய்தாலும் ஒரு சோழ கதிர்கள் கூட கீழே சிந்தாமல் அழகாக பயிர்களை அறுவடை செய்து அசத்துகிறது. பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த விவசாயிகளுக்கே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேநீர் குடித்துவிட்டு.. பணம் தராத பா.ஜ.க எம்.எல்.ஏ…!!!

பாஜக எம்.எல்.ஏ தேநீர் குடித்துவிட்டு பணம் தரவில்லை என டீக்கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போதைய எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான பாஜகவை சேர்ந்த கரண்சிங் வர்மா தனது தொகுதிக்கு காரில் சென்று இருக்கின்றார். அப்போது அவரின் காரை மறித்த தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கரண்சிங் வர்மா மற்றும் அவருடன் வந்த கட்சியினர் தேநீர் குடித்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

சார் என்னை மன்னிச்சிடுங்க….மாணவனின் கொடூர செயல்…. எச்சரித்த போலீசார்….!!!!

கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த  மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  அங்கு படிக்கும்  ஒரு மாணவர் மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மீது பாலியல் துன்புறுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்  குற்றம் செய்யப்பட்ட மாணவர் மன்னிப்பு கடிதம் எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா கொலை பண்ணுவாங்க…? கள்ளக்காதலர்களை பிரிக்க சாமியார் செய்த சதி திட்டம்… உச்சகட்ட கொடுரம்…!!!!

2  பேரை கொலை செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேலா பவுடி  காட்டில் வாலிபர் மற்றும் இளம் பெண் என 2  பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின்  சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் காரணமா?…. டுவிட்டரில் நிறுத்தப்பட்ட ப்ளூ டிக் …. எலான் மஸ்க் விளக்கம்….!!!!

டுவிட்டரில் ப்ளூ டிக்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க் . இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரபல ஊடகமான டுவிட்டரை வாங்கினார். அதனை தொடர்ந்து அவர் நிறுவனத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். மேலும் டுவிட்டர் பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெற மாதம் 662 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான்  மஸ்க் […]

Categories
தேசிய செய்திகள்

அந்நியன் பட பாணியில்…. அதிரடிப்படை காவலர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

காவல் துறை மற்றும் திருடர்களுக்கு இடையிலான புது பரிமாணத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிரடிப்படை தலைமைக் காவலர் வெளிப்படுத்தி இருக்கிறார். 3 சிறார்கள் உட்பட செல்லிடப்பேசி திருடர்கள், பிக்பாக்கெட் கும்பலை வைத்துக்கொண்டு அதன் தலைவனாக அதிரடிப்படை தலைமைக் காவலர் மேகலா ஈஸ்வர் என்ற ஈஸ்வர் பிரசாத் (35) செயல்பட்டுள்ளார். செல்லிடப்பேசி திருட்டு வழக்கில் கைதாகிய 2 குற்றவாளிகளிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் ஈஸ்வர் தலைமையில் வேலை செய்து வருவதை ஒப்புக்கொண்டனர். அதன்பின் சிறுவர்களை தவறாக வழி நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

WOW: ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக…. குறும்படத் திருவிழா… இந்திய ராணுவம் ஏற்பாடு….!!!!

ஜம்மு காஷ்மீர் லடாக்கில் முதல்முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவமானது ஏற்பாடு செய்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் சினிமா திறமையை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த குறும்படத் திருவிழாவை நடத்த இருக்கிறது. இவற்றிற்கு “தில் மாங்கோ மோர்” என பெயரிட்டுள்ளனர்.  இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல்பலி அவர்களின் யோசனையின் படி ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த “தில் மாங்கோ மோர்”  திட்டம்.  5 […]

Categories
தேசிய செய்திகள்

PERSONAL LOAN வாங்க போறீங்களா?… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான தனி நபர் கடன் வட்டி எனில் 8.9% -10.55% ஆகும்.  தற்போது குறைவான வட்டியில் தனி நபருக்கான கடனை வழங்கக்கூடிய வங்கிகள் குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம். பஞ்சாப் நேஷனல் வங்கி: இந்த வங்கியில் 9.8% வட்டியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபர் கடனானது வழங்கப்படும். 5 வருட கால தவணை திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,574 செலுத்தவேண்டும். யெஸ் வங்கி இவற்றில் 10% வட்டி எனும் அடிப்படையில் தனி […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம். சுகன்யா சம்ரிதி யோஜனா  பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 […]

Categories
தேசிய செய்திகள்

லொல்..லொல் என குரைத்த கர்ப்பிணி நாய்!…. கடுப்பான மாணவர்களின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி….!!!!!

நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மோடி..மோடி.. என கோஷம் எழுப்பிய நபர்கள்: “உங்கள் மனதை நாங்கள் வெல்வோம்”…. அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு போட்டிப்போடும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சமகால் மாவட்டத்தின் ஹலோலில் நேற்று பிரமாண்ட சாலை பேரணி நடத்தினார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, கூட்டத்திலிருந்த சில பேர் மோடி..மோடி..! என கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடம் ஷாக்கான அரவிந்த் கெஜ்ரிவால், […]

Categories
தேசிய செய்திகள்

MLA-வின் சட்டையை பிடித்து இழுத்து சென்று தாக்குதல்…. பின்னணி என்ன?…. வெளியான பரபரப்பு வீடியோ…..!!!!

தலைநகர் டெல்லியில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இத்தேர்தலில் பணத்துக்காக உள்ளாட்சி இடங்களை ஆம் ஆத்மி விற்பனை செய்வதாக பா.ஜ.க தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் இச்சம்பவம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், டெல்லி மத்தியாலா தொகுதி எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர்  கூறியதாவது, “எம்எல்ஏ குலாப் சிங் யாதவ் இரவு 8 மணியளவில் […]

Categories
தேசிய செய்திகள்

Twitter: இனி பணிநீக்கங்கள் இருக்காது…. ஆனால்!…. எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

உலகில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து  பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாற்றத்தை தொடர்ந்து, தற்போது ஊழியர்களுக்கு நிமத்தியளிக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நிறுவனத்தில் பணிநீக்கங்கள் இருக்காது என்பதோடு, புது நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். ஊழியர்களுடனான சந்திப்பில், […]

Categories

Tech |