கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் வேலையின்மை விகிதம் தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடரும் நிலையில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதற்கு கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதே முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் போக்குவரத்து தொடங்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய துறைகள் பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்கள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் 43.3 சதவிகிதமாகவும், மே மாதத்தில் […]
