திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை இடஒதுக்கீடு வழங்கப்படாத நிலையில், தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
