அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக ஜெ.ஜெ. கட்சி என்ற அமைப்பின் நிர்வாகி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தமிழக மாணவர்கள் உயர்கல்வி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளை எதிர்கொள்வதற்கு நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு போன்றவற்றை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு வடிவமைக்கும் பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படுவதாக தெரிவித்தார். […]
