தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேட்டாம்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மாதத்தில் 6 நாள்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும், அதற்கான ஊதியம் வழங்குவதிலும் முறைகேடு நடப்பதாகவும் வேலை பார்க்கும் பெண்கள் […]
