ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 4 லட்சம் ரூபாயை சுருட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய் பிரதான். இவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தனது தம்பியுடன் வசித்து வருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சுப்ரியா தன்னை […]
