மராட்டிய மாநிலத்தில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லகேதே நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த 2014ம் வருடம் மராட்டிய சட்டசபைக்கான தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
