நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் […]
