பள்ளி வளாகத்தில் தேங்கி நின்ற தண்ணீரை வடிகால் அமைத்து மாணவர்கள் வெளியேற்றினார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதுபோல உடுமலை தளிசாலையில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில் மழை நீர் வெளியேற முடியாமல் குளம் போல் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி வருகின்ற நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து […]
