தேனியில் தேங்காய் வியாபாரியிடம் உரிய ஆவணங்களின்றி இருந்த 1,40,000 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்துப் பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. அதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பறக்கும் படையின் அதிகாரியான முத்துராமன் தலைமையில் […]
