மரக்காணம் அருகில் தேங்காய் நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு லாரிகள், எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் மண்டவாய் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் (49) இவருடைய வீட்டின் அருகில் தேங்காய் நாரிலிருந்து பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் 20-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத […]
