பெண்கள் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் தேங்காயை நெருப்பில் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தேங்காய்களை சுட்டு விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்தி ஆடி மாதத்தை பெண்கள் வரவேற்றனர். இந்நிலையில் பெண்கள் தனது வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டனர். இதனையடுத்து பெண்கள் தேங்காயின் கண் பகுதியை உடைத்து அதில் நிலக்கடலை, பச்சரிசி, நாட்டுச்சக்கரை, பச்சைபயிறு உள்ளிட்ட பொருட்களை உள்ளே வைத்தனர். மேலும் அந்த தேங்காயை ஒரு நீளமான குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டனர். […]
